Sunday, September 1, 2013

பிரிவினை வாதிகள் யார்? போலி ஒற்றுமை கோஷதுக்கான பதில்

       

 "ஊரூராய் போனார்கள் உம்மத்தை இரண்டாக்கி விட்டார்கள்" என்று நம்மை குறை சொல்கிறார்கள். தவ்ஹீத் சகோதர்கள் யாரும் எங்கேயும் இன்னொருவரிடம் தமது கருத்துக்களைத் திணிக்கவில்லை. யாருக்கும் தமது கருத்தை பின்பற்றும் உரிமையுண்டு தமது கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள், இதனால் அவர்கள் அடிக்கபடுகிரார்கள், இங்கு தவறு எத்தரபால் ஏற்படுகின்றது என்பதை யாரும் தெரிந்து கொள்வர். இதை வைத்து தான் நம்மை "குழப்பவாதிகள்" என்று இவர்கள் கூறுகின்றனர்.



தவ்ஹீத் பிரச்சாரத்தின் ஆரம்பகாலத்தில் சத்தியத்தை சொல்லும் போது அடித்தார்கள், திட்டினார்கள், அவதூறுகள் சொன்னார்கள், சமூக பகிஷ்காரம் செய்தார்கள், ஊரை விட்டும் வெளியேற்றினார்கள், ஏன் தவ்ஹீத் பள்ளிகளை எரித்தார்கள், சிலரை கொலை செய்தார்கள்.

தவ்ஹீத் வாதிகளை கொண்டு விட்டால் சத்தியம் மறைந்து விடாது. அல்லாஹ் தௌஹீத் வாதிகளை ஒரு ஊடகமாக தான் பயன்படுத்துறான் அவர்களை கொண்டாலும் அல்லாஹ் சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான்.

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்." [குர்'ஆன் 61:8]


தடைகளை தாண்டி  சத்தியம் வளர்ந்து விட்டது. இப்பொழுது அதை அணைக்க எல்லாருமாக சேர்ந்து போலி ஒற்றுமை கோஷத்தை எழுப்புகிறார்கள். அந்த போலி ஒற்றுமை கோஷதுக்கான பதிலாகவே இக்கட்டுரையை பதிவு செய்ய விரும்புகிறேன்.

முதலில் நாம் இந்த வசனத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

"நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்." [குர்'ஆன் 6:159]

அல்லாஹ் இந்த வசனத்தில் முஸ்லிம் உம்மத்தை பிரிக்கிரத்தை பற்றி பேசவில்லை, மாறாக மார்கத்தில் பிளவு உண்டு பண்ணுவதை தான் சொல்கிறான். மார்கத்தில் பிளவு உண்டு பண்ணுவது என்றால் மார்க்கம் சொல்லாத ஒரு கொள்கையை சொல்லுவதை குறிக்கும்.

தவ்ஹீத் வாதிகள் குர்'ஆன் சுன்னாஹ்வில் உள்ள சரியான கொள்கையில் இருக்கிறார்கள், அதை பிரச்சாரமும் செய்கிறார்கள். மேல் உள்ள வசனத்தின் படி பிரிவினை வாதிகள் மற்ற ஜமாத்தினர்கள் தான். காரணம் அவர்கள் தான் இஸ்லாம் சொல்லாத ஒரு கொள்கையை ஏற்று இருக்கிறார்கள்.


இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
ஒருவரோடு நல்லமுறையில் நடந்து கொள்வது வேறு. அவரோடு ஒற்றுமையாக இருப்பது வேறு

அந்நிய மதத்தவர்களுடன் நங்கள் நல்ல முறையில் நடந்து கொள்வோம், ஆனால் அவர்களோடு ஒற்றுமையாக இருக்க முடியாது

அதாவது அவர்களோடு பேசுவோம், நல்ல விஷயங்களில் உதவி செய்வோம், மனிதன் என்றவகையில் இது போன்ற பல விஷயங்களை செய்வோம், கட்டாயம் ஓவொரு முஸ்லிமும் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒற்றுமை என்பது எல்லோரும் ஒரே கொள்கையில் இருப்பதை குரிக்ககூடியது. எனவே அவர்களுடைய மார்க்க விஷயங்களில் கலந்து கொள்ளமாட்டோம்

அதே போன்று தான் இஸ்லாத்துக்கு உள்ளே இருக்கும் பிரிவினைகளையும் அணுகுவோம். மற்ற ஜமாதினரோடு நல்லமுறையில் நடந்து கொள்வோம் ஆனால் அவர்களோடு ஒற்றுமையாக இருக்க முடியாது, ஏன் என்றால் அவர்களுடைய கொள்கை வேறு எமது கொள்கை வேறு.

அதே நேரம் சத்தியத்தை எதிர்பவர்களுடன் பகைமை பாராட்டுவதையே பின்வரும் வசனங்கள் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். [குர்'ஆன் 58:22]

"இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” [குர்'ஆன் 60:4]

இது போன்ற வசனங்களை மற்ற ஜமாத்களை சார்ந்த உலமாக்கள் பேசிய வரலாறே காணமுடியாமல் இருக்கிறது. மார்க்கத்தின் ஒரு பகுதியை ஏற்று மற்ற பகுதியை மறுப்பது போன்று இருக்குது.

மற்ற ஜமாத்களை சார்ந்த சில மௌலவி மார்கள் ஸஹாபாக்களின் வாழ்வில் இருந்து சில முரண்பாடுகளின் போது அவர்கள் ஒற்றுமையாக இருந்த சம்பவத்தை அவர்கள் சொல்ல கூடிய ஒற்றுமைக்கு ஆதாரமாக காட்டுவார்கள், ஆனால் அவர்கள் காட்ட கூடிய அனைத்துமே பிக்ஹ் விஷயங்களில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் இருந்த முரண்பாடுகளின் போது அவர்கள் ஒற்றுமையாக இருந்தது தான்.

பிக்ஹ் விஷயங்களில் முரண்பாடு இருக்கலாம், ஆனால் அகீதாவில் (கொள்கையில்) எந்த முரண்பாடும் வரகூடாது, ஸஹாபாக்களில் எவருமே கொள்கையில் முரண்பட்ட எந்த வரலாறும் இல்லை.

எமக்கும்  மற்ற ஜமாத்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு பிக்ஹ் விஷயங்களில் மட்டும் அல்ல, கொள்கையிலும் நாம் முரண்படுகிறோம், மற்ற ஜமாத்களின் கொள்கை வேறு எமது கொள்கை வேறு.

எனவே ஸஹாபாக்கள் பிக்ஹ் முரண்பாடிற்கு மத்தியில் ஒற்றுமையாக இருந்ததை கொள்கையில் பிளவுபட்டிருக்கும் நாம் ஒற்றுமையாக இருக்க ஆதாரம் காட்ட கூடாது.

இஸ்லாம் நிச்சயமாக ஒற்றுமையை வலியுறுத்துகின்ற மார்க்கம், அதில் மாற்று கருத்து இல்லை. குர்'ஆணும் ஹதீஸும் மிகவுமே ஒற்றுமையை வலியுறுத்த கூடியதாகவே இருக்கிறது, குர்'ஆன் ஹதீஸை பிரச்சாரம் செய்யும் நாமும் ஒற்றுமையை விரும்புகிறோம், ஆனால் எதில் ஒற்றுமை படவேண்டும் என்ற இடத்தில் தான் சமூகம் அறிவில்லாமல் இருப்பதை பார்க்கிறோம்.

ஒற்றுமை வேண்டும், ஆனால் இஸ்லாம் சொல்லுகின்ற ஒற்றுமை வேண்டும். வேறெந்த விதத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் அது எமக்கு இம்மையிலோ மறுமையிலோ எந்த பயனும் தரபோவதில்லை.

அல்லாஹ் சொல்கிறான்:
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்."  [குர்'ஆன் 3:103]

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் கைரு என்று சொல்லபடுவது வஹியை குறிக்கும். வஹி என்றால் குர்'ஆன், சுன்னாஹ் மட்டும் தான்.

எல்லோரும் குர்'ஆன் சுன்னஹ்வை சரியான முறையில் பின்பற்ற முடிவெடுங்கள் நங்கள் ஒற்றுமைக்கு வருகிறோம்.

No comments:

Post a Comment