Sunday, December 29, 2013

நபி அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புகின்றவர்கள் அநியாயக்காரர்களா?

25:8 ..... என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

இந்த வசனத்தை குறிப்பிட்டு "எனவே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புபவர்கள் அநியாயக்காரர்கள்" என்று வாதங்கள் வைக்கிறார்கள். இந்த வாதத்தை வைக்காமல் இவர்கள் சூனியத்தை பற்றி பேசமாட்டார்கள், அந்த அளவுக்கு இந்த வாதத்தை நம்பி அதை மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இது அவர்கள் முக்கியமாக வைக்க கூடிய வாதம் என்பதால் அதற்கு ஒரு பதிலை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

Saturday, December 21, 2013

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

TNTJ என்ற அமைப்பின் ஒரு ஆய்வின் முடிவாக சொல்லப்படும் அறிஞர் PJ உடைய இந்த ஆய்வின் ஒரு முடிவு சூனியம் என்று ஒன்று இல்லை, இன்னும் சில இடங்களில் சூனியம் என்றால் மேஜிக். இதில் எது அவர்களுடைய இறுதி நிலைபாடு என்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும் ......
இந்த ஆய்வை SLTJ என்ற அமைப்பு எந்த ஒரு மீல்பரிசீல்னையும் இல்லாமல், ஏன், அறிஞர் PJ செய்தது உண்மைலேயே ஒரு ஆய்வு தானா? என்று கூட பார்க்காமல் "செவிமடுத்தோம், கட்டுப்பட்டோம்" என்று செயலால் நிருபிக்கும் விதத்தில் அதை ஏற்று பின்பற்றிவருகிறார்கள், இதற்கு தக்லீத் என்று பெயர் சூட்டுவதை அவர்கள் விரும்பாத காரணத்தால் அந்த வார்த்தையை தவிர்த்து கொள்கின்றேன்.

Tuesday, October 15, 2013

கட்டுபடுதல் என்பதே வணக்கமா? : ஜமாத்தே இஸ்லாமியின் பிழையான அடிப்படை

         
   
"வணக்கத்திற்குரிய நாயகனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாம் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையில் அவர் சொல்லவந்த பிரதான கருத்து "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்பதை தான். இந்த கருத்து முதலில் சொன்னவர் ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் அபுல் அ'லா மௌலான மௌதூதி அவர்கள் தான்.

Saturday, October 12, 2013

யார் இந்த ஷீஆக்கள்?


     
         அப்துல்லாஹ் பின் பா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீஆஇஸ்மாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள் பின்னர் தமது அரசியல் சிந்தனைக்குளுக்கெல்லாம் மதச் சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகி சென்றுவிட்டனர்.

நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஆட்சி தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீஆக்கள் தமது தவறான சிந்தனைகளை எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்

Friday, October 11, 2013

சூபித்துவதிற்கு ஆதாராம் தேடும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி


சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் இலங்கையிலும் இந்தியாவிலும் இன்னும் உலகில் பல பாகங்களில் இயங்கிவரும் சூபித்துவ தரீகா இயக்கத்தின் முக்கியமான அறிஞர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி. தௌஹீத் பிரச்சாரம் ஆரம்பித்ததும் மக்கள் சத்தியத்தை புரிந்து இவர்களுடைய இயக்கத்தை விட்டும் விலகிவர ஆரம்பித்தார்கள். ஏனெனில் தௌஹீத் வாதிகள்  எதை சொன்னாலும் குர்'ஆணிலும் ஹதீஸ்களிலும்  இருந்து ஆதாரம் காட்டுவார்கள். இதை பார்த்து விட்டு இவர்களும் குர்'ஆஅனையும் ஹதீஸ்களையும் ஆதாரம் காட்டுறோம் எண்டு சொல்லி குர்'ஆணையும் ஹதீஸையும் வளைத்து வேறு விளக்கம் சொல்லி, அல்லது அரை குறையாக மக்கள் முன்னாள் எடுத்து காட்டி சமாளித்து கொண்டிருக்கிறார்கள்.       

Saturday, October 5, 2013

தப்லீக் ஜமாத்தின் 6 Number


            தப்லீக் ஜமாத்தின் அடிப்படை அம்சங்களில் அவர்கள் ஆறு விடையங்களை அமைத்திருக்கின்றார்கள். இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுறையோ விளக்கமோ அவர்களது த'லீம் நூல்களிலிருந்து மாத்திரம் தான் பெறப்பட வேண்டும். ஸகரியா ஸாஹிப் என்பவர் தனக்கும் அப்போதைய ஹஸரத் ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவை பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீக்கின் த'லீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். குர்'ஆணை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கபடுகின்ர த'லீம் தொகுப்பு தப்லீக் ஜமாதினருக்கு கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது.

Thursday, September 12, 2013

தப்லீக் ஜமாஅத் : கலிமாவுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்

அகீதா   
  
   லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேஅல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது.

Sunday, September 1, 2013

பிரிவினை வாதிகள் யார்? போலி ஒற்றுமை கோஷதுக்கான பதில்

       

 "ஊரூராய் போனார்கள் உம்மத்தை இரண்டாக்கி விட்டார்கள்" என்று நம்மை குறை சொல்கிறார்கள். தவ்ஹீத் சகோதர்கள் யாரும் எங்கேயும் இன்னொருவரிடம் தமது கருத்துக்களைத் திணிக்கவில்லை. யாருக்கும் தமது கருத்தை பின்பற்றும் உரிமையுண்டு தமது கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள், இதனால் அவர்கள் அடிக்கபடுகிரார்கள், இங்கு தவறு எத்தரபால் ஏற்படுகின்றது என்பதை யாரும் தெரிந்து கொள்வர். இதை வைத்து தான் நம்மை "குழப்பவாதிகள்" என்று இவர்கள் கூறுகின்றனர்.