Tuesday, December 9, 2014

ஹதீஸ்கலையில் மௌலவி பீஜே அவர்களின் தவறான அணுகுமுறை


ஸஹீஹான ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படும என்பதை பற்றி நான் விளங்கபடுத்த வரவில்லை.

நான் வைக்கும் வாதங்கள் ஏற்கனவே எமது தரப்பில் இருக்கும் அறிஞர்களால்  வைக்கப்பட்டதே. நான் அதை ஒரு தனியான பதிவில் பதிவு செய்ய காராணம், இந்த வாதம் எமது தரப்பால் வைக்கப்படும் பிரதான வாதங்களில் ஒண்டு. இந்த வாதம் பலமுறை வைக்கப்பட்டது, ஆனால் TNTJ & SLTJ தரப்பால் கணக்கெடுக்காமல் மறைப்பதற்கு முயற்சி செய்வது போன்று ஒரு சில வார்த்தைகளை சொல்லி விட்டு போகிறார்கள் என்ற காரணமும், இந்த பிரதான வாதம் மற்ற வாதங்களோடு வைக்கபடுவதால் பெரிதாக விளங்குவதில்லை என்று நினைத்தும் இதை தனியாக பதிவு செய்கிறேன்.

Friday, June 13, 2014

அல்லாஹ் எங்கே உள்ளான்?



அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவும், அதற்கான விடையும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இன்று அதிகமான முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி தவறான நம்பிக்கைதான் நிலவுகின்றது. அத்வைதிகள், 'அல்லாஹ் எல்லாமாயும் எங்குமாயும் உள்ளான்' என்று கூறுகின்றனர், 'அவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதாக' நம்புகின்றனர். இன்னும் சில பிரிவினரும் 'அவன் எங்கிருந்தால் எங்களுக்கென்ன?' என்று கேள்வி கேட்டு இதில் அலட்சியப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.

Monday, April 21, 2014

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் : TNTJ & SLTJ அல்லாஹ்வை புரிந்துகொள்ளவில்லை!


அல்லாஹ்வை சரியான முறையில் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டும், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சொல்லுவதை படைப்பினங்களுக்கு ஒப்பிடாமல், எப்படி என்று சொல்லாமல்/கேட்காமல், நம்பவேண்டும், "இது மட்டும்" என்று சொல்லி ஒன்றைக்கூட மறுக்கக்கூடாது. அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக நபி சொல்லி இருக்குறார்கள். அல்லாஹ் எப்படி இறங்குகிறான் என்பது தெரியாது, நிச்சியமாக அல்லாஹ்வின் இறங்குதல் படைபினங்களுக்கு ஒப்பானதல்ல. அல்லாஹ் தன் மகிமைக்கு தக்கவாறு இறங்கி வருகிறான் என்று நம்புவது கடமை.