Friday, December 18, 2015

தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் 3 நாள், 40 நாள், 3 மாதம் என்று வெளிக்கிளம்பி த'வா செய்வது சரியா?

முதலாவது, வெளிக்கிளம்பி செல்வது சரியா பிளைய என்று புரிந்துகொள்வதற்கு முன் அதனை சரி என்று எடுத்தாலும் கூட தப்லீக் ஜமாஅத் நேரான பாதையில் இருப்பதாக ஆகிவிடாது. ஏன் என்றால் அடிப்படை கொள்கையிலையே அவர்கள் பிழைத்து விட்டார்கள், வெளிக்கிளம்பி செல்வது கொள்கைக்கு பிறகு உள்ள ஒரு அம்சம்.


சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.
வெறுமனே வெளிக்கிளம்பி சென்று த'வா செய்வதாக இருந்தால் அல்லது வீடு வீடாக சென்று த'வா செய்வதாக இருந்தால் அதனை பிழை என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் தப்லீக் ஜமாத்தில் உள்ள இந்த விஷயம் அப்படியல்ல,
தப்லீக்கில் உள்ள விதிமுறைகளை பற்றி சொல்லும் போது ஷேக் இல்யாஸ் அவர்கள் சொல்கிறார்:
"இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பபடி உருவாக்கவில்லை, அது எனக்கு கொடுக்கப்பட்டது, அவ்வாறு செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது." [ஆதாரம் - தப்லீக்கே தஹ்ரீக் ப:57]

தப்லீக்கின் விதிமுறைகள் அனைத்தும் அவருக்கு கட்டளையிடப்பட்டது என்று தனக்கு வஹி வந்ததாக சொல்கிறார். இது காதியானி கொள்கை. இது கொள்கை குப்ர்.

இப்படியான ஒரு நம்பிக்கையுடன் செல்வது நிச்சயமாக தடை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


அது இல்யாஸ் அவர்கள் விட்ட பிழை, நாம் அந்த நம்பிக்கையில் இல்லை, நாம் வெறுமனே வெளிக்கிளம்பி சென்று த'வா செய்கிறோம் என்று சில தப்லீக் சகோதரர்கள் வாதாடலாம்.

ஆம், தப்லீக் ஜமாத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் நடைமுறையில் பார்த்தால் அது வெறுமனே வெளிக்கிளம்பி செல்வதாக இல்லை, சில விதிமுறைகளை பார்த்தால் அதற்கு மார்க்க சாயம் பூச படுகிறது என்பதை கண்டுகொள்ளலாம்.

உதாரணமாக:-

- வீடு வீடாக செல்லும் போது, கதைக்க கூடாது, கதைத்தால் பூரணமான நன்மை கிடைக்காது, கஸ்த்து முறிந்துவிடும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கிறனர்.

- 40 நாள் வெளிக்கிளம்பி செல்ல எண்ணம் வைத்த ஒருவர், 39 ஆம் நாள் திரும்பி வந்தால் நன்மை கிடைக்காது, என்று விதிமுறைகள் இருக்கின்றனர்.

இப்படி இன்னும் சில விதிமுறைகளும் இருக்கின்றனர்.

வெறுமனே, சில ஒழுங்குகளை வைத்துகொள்ள விதிமுறைகள் வைத்திருப்பது வேறு, ஆனால் இப்படி செய்தால் நன்மை கிடைக்காது, முறிந்துவிடும் என்றெல்லாம் சொல்வதாக இருந்தால் அது குர்'ஆன் சுன்னஹ்வில் இருந்து வழிகாட்டல் இருக்க வேண்டும்.

நன்மை கிடைக்காது என்றும் ம்றிந்துவிடும் என்றும் சொல்வதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

அவ்வாறு நன்மை கிடைக்காது, முறிந்துவிடும் என்று சொல்லும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உரியது. இந்த விதிமுறை அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டும், அல்லது அல்லாஹ் அவனது தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மூலம் சொல்லி இருக்கவேண்டும். இப்படியான ஒரு விதிமுறையை மார்க்கத்தில் சொல்லப்படவில்லை, இது பித்'அத்.

எனவே, இது ஒரு பிழையான காரியமாகும்.

அது மட்டுமின்றி அறிவில்லாமல் த'வா செய்வது மார்க்கத்தில் கூடாது, அடிப்படை கொள்கை கூட தெரியாதவர்கள் எல்லாம் அல்லாஹ்வை பற்றியும் மார்க்கத்தில் உள்ள அம்சங்கள் பற்றியும் பிற மக்களுக்கு சொல்லிகொடுக்க தகுதி இல்லை. அறிவில்லாமல் அல்லாஹ்வை பற்றியும் அவனுடைய மார்க்கம் பற்றியும் பேசுவது தடை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment