Saturday, April 18, 2015

ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களின் பிழையான அடிப்படைகள்


ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களின் பிழையான அடிப்படை குறித்து மக்களுக்கு அறிவூட்டவும், தவ்ஹீத் வாதிகளுக்கும் ஜமாத்தே இஸ்லாமி இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களுக்கு இடையில் எந்த வேறுபாடுமில்லை, தவ்ஹீத் வாதிகள் பிக்ஹ், சுன்னத் போன்ற விஷயங்களில் கவனம் எடுக்குறார்கள் உறுதியாக இருக்குறார்கள், ஜமாத்தே இஸ்லாமி இஹ்வானுல் முஸ்லிமீன் சார்ந்தவர்கள் பிக்ஹ், சுன்னத் போன்ற விஷயங்களில் பொருற்படுவதில்லை என்ற மக்களின் தவறான சிந்தனையை சீர்திருத்துவதுமே இவ்வாக்கத்தின் நோக்கம்.


1924ல் கிலாபத் வீழ்ந்ததன் பின்னர் உலக முஸ்லிம்களின் கவலை பல ஆண்டுகளுக்கு மனதில் கிலாபதாகவே இருந்துவந்தது, இது தான் ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற இன்னும் நூற்றுகனகான இயக்கங்களின் பின்னணி. இந்த பின்னணியை மனதில் வைத்துகொண்டு இவர்களுடைய பிழையான அடிப்படைகளை பாப்போம்


கலிமாவுக்கு வழங்கபடும் தவறான விளக்கம்


இவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவுக்கு கொடுக்கும் விளக்கம் "சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது". இதற்கு தவ்ஹீத் அல் ஹாக்கிமிய்ய என்று இவர்கள் பெயர்சூட்டி உள்ளார்கள். மௌலான மௌதூதி, செய்யித் குதுப் போன்றவர்கள் தான் இதை முதலில் சொன்னவர்கள். அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களை எதிர்க்கும் போது ஹவாரிஜ்கள் முன்வைத்த முக்கியமான வாதங்களில் ஒண்டு "சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது" என்பது குறிப்பிடத்தக்கது.

தவ்ஹீதுல் உலூஹிய்ய, தவ்ஹீதுல் ருபூபிய்ய, போன்று தவ்ஹீதுல் ஹாக்கிமிய்யவும் தவ்ஹீதில் ஒரு பகுதி, தவ்ஹீதுல் ஹாக்கிமிய்ய தான் முக்கியமானது அதை பிரச்சாரம் செய்யவே நபிமார்கள் அனுப்பபட்டார்கள் என்று இவர்களுடைய பிரச்சாரத்தில் முன்வைப்பார்கள்.

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை ஆனால் நபி அவர்கள் கலிமாவை பிரச்சாரம் செய்த நோக்கம் அதுவல்ல, நபி அவர்கள் கலிமாவை பிரச்சாரம் செய்த நோக்கம் "வணக்கத்திற்கு தகுதியான நாயன் அல்லாஹ்வை தவிர வேற யாரும்/எதுவும் இல்லை" என்பதை சொல்லுவற்கு தான். அதற்கு பின்வரும் குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைகிறது

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னை தவிர வேறு எவருமில்லை, எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹி அறிவிக்காமலில்லை. [குர்ஆன் 21:25]



கட்டுபடுதல் என்றாலே வணக்கம் என்ற தவறான அடிப்படை


"ஒருவருக்கு கட்டுபடுவது அவரை வணங்குவதாகும் (ஷிர்க்), ஒரு விஷயத்தில் அல்லாஹ்வின் சட்டமொன்று இருக்க, அதை அவன் விட்டுவிட்டு தன் தாய் தந்தையர்களோ, அதிகாரிகளோ வலியுருத்துவதிற்கு கட்டுபாட்டால் அவன் அவரை வணங்குகிறான்." "மனோ இச்சைக்கு கட்டுபடுவது மனோ இச்சையை வண்னகுவதாகும்" என்று சொல்லி "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்ற அடிப்படையை மறைமுகமாக சொல்லுவார்கள்.

இதன் மூலம் அவர்கள் "அல்லாஹ்வின் சட்டம் அல்லாத சட்டத்தை கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு கட்டுபட்டால், அது அவர்களை வணங்குவதாகும்" என்பதை தான் சொல்ல நாடுகிறார்கள். ஏன் என்றால் இவர்களுடைய முழு நோக்கமும் இஸ்லாமிய ஆட்சி தான்.

அவர்கள் உதாரணதிற்கு "சீதனம் எடுக்க கூடாது என்பது அல்லாஹ்வின் சட்டம், ஒருவன் சீதனம் எடுக்குமாறு வலியுறுத்தும் தனது தாய் தந்தையர்களுக்கு கட்டுபட்டால், அவன் தனது தாய் தந்தையர்களை வணங்குகிறான்" எண்டு சொல்வார்கள்.

இது இவர்களாக உருவாக்கிய அடிப்படியே தவிர இஸ்லாம் சொல்லும் அடிப்படையல்ல. இவர்கள் சொல்லுவதை பார்த்தல் ஒரு பாவம் கூட சாதாரண பாவமாகாது, எல்லாமே ஷிர்க் என்று தான் ஆகிவிடும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருவன் அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று இருக்கும் போது, ஈமானின் பலகீனம் காரணமாக அதிகாரிக்கோ, மனோ இச்சைகோ கட்டுபட்டால் அது பாவம் என்று தான் கற்று தந்தார்களே தவிர, அதை ஷிர்க் என்று கற்று தரவில்லை.

மனோ இச்சைக்கு கட்டுப்படும் விபச்சாரத்தை நபி அவர்கள் பாவம் என்று தான் கற்று தந்தார்களே தவிர, அதை ஷிர்க் என்று கற்றுத்தரவில்லை.

எனவே, ஒருவன் அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று இருக்கிறான், ஈமானின் பலகீனம் காரணமாக அவன் வேற ஒருவருக்கோ அல்லது தன் மனோ இச்சைகோ கட்டுபட்டால் அவன் பாவியாக தான் கருதபடுவான், அவன் முஷ்ரிக் ஆக கருதபடமாட்டான்.


குறிப்பு: இவ்வாறு அடிப்படைகளை தொகுத்த இவர்களே இவர்களுடைய தலைவர்கள் இசை, சினிமா, தாடியை வலித்தல், போன்ற ஹராமான காரியங்களை ஹலாலாக்கினதை இவர்கள் ஏற்றிருப்பது இவர்களுடைய கொள்கைக்கே முரண்.


மேல் குறிபிடப்பட்டுள்ள இரண்டு அடிப்படைகள் தான் இன்று ஹவாரிஜ்களான ISIS , அல்கைதா, போக்கோ ஹராம் போன்ற தீவிரவாத குழுக்களின் தோற்றத்திற்கு அடிப்படை காரணம்.



தக்பீர் - முழு முஸ்லிம் சமூகத்தையே காபிர் என்று தீர்பளித்தல் 


மேலுள்ள இவர்களுடைய இரண்டு அடிப்படைகளின் அடிப்படையில் இன்று உள்ள முஸ்லிம்கள் அவர்கள் உற்பட அனைவருமே காபிர்கள் எபதே அவர்களுடைய நிலைப்பாடு ஆனால் பகிரங்கமாக சொல்லமாட்டார்கள் மனதில் வைத்திருப்பார்கள்.

ஆரமபத்தில் இக்கொள்கையை சொன்ன செய்யித் குதுப், மௌலான மௌதூதி போன்றவர்கள் இதை பகிரங்கமாகவே சொன்னார்கள், இன்று முஸ்லிம் சமூகமே இல்லை என்றும் சொன்னார்கள்.

உதாரணமாக:
இவர்களுடைய தலைவர்கள் முழு உம்மத்தையும் காபிர் என தீர்பளித்தார்கள் என்று செய்யித் குதுப் தீர்ப்ளித்ததை அவர்களுடைய இன்னுமொரு தலைவரான யூஸுப் அல் கர்ளாவி தனது அவ்லாவியாதுள் ஹரகாதுள் இஸ்லாமியா (பக்கம்:110) என்ற நூலில் பின்வருமாறு சாட்சி சொல்கிறார்.
அந்த கால கட்டத்தில் தான் அஷ் ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் கடைசி நிலைப்பாட்டை உள்ளடக்கிய அவருடைய புத்தகங்கள் வெளியாகினர், முழு உம்மாதையும் காபிர் என்று சொன்ன தீர்ப்பை உள்ளடக்கியவை ......


ஆட்சியை முற்படுத்தல்


இவர்களிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  சுன்னாவிற்கு பெரிய மரியாதை இல்லை.
ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய ஆட்சியி விரும்பவேண்டும் ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகீதாவை தான் முற்படுத்தினார்கள், ஆட்சி கிடைத்தால் அதை எவ்வாறு எடுத்து செல்லவேண்டும் என்று சில சட்டங்கள் இருக்குதே தவிர அதை முற்படுத்தி பிரச்சாரம் செய்வது நபி வழியல்ல.

ஆட்சி முற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே கலிமாவுக்கு அப்படியான ஒரு விளக்கத்தை சொன்னார்கள்.


ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தூண்டுவது

இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தூண்டுவதையே இவர்களுடைய பிரச்சாரமாக எடுத்து இருக்கிறார்கள். சில பாவமான காரியங்கள் நடைபெறுகிறது, மன்னர் ஆட்சி, அநீதி நடக்கிறது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக தூண்டுகிறார்கள். தூண்டுவது மட்டுமில்லை, பல அரபு நாடுகளில் இன்று நிம்மதியற்ற நிலைமை இருப்பதற்கு இது தான் காரணம், மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுவது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை தடுத்து இருக்கிறார்கள்.

ஹுதைபா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
"எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நான், "அந்தக் கால கட்டத்தை அடைந்தாள் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன்.
அதற்கு "அந்த ஆட்சியாளரின் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கபட்டாலும் சரியே! (அந்த ஆட்சித்தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள். [புகாரி]


இவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்களோ அந்த குற்றங்கள் இருந்தாலும் கிளர்ச்சி செய்யவேண்டாம் என்று இஸ்லாம் தடுத்து இருப்பதை மேலுள்ள ஹதீஸ்கள் தெளிவாக சொல்கிறது.

தெளிவான ஒரு குப்ரை காணும் வரை கிளர்ச்சி செய்யவேண்டாம் என்றும் தொழுகையை விடும் வரை கிளர்ச்சி செய்யவேண்டாம் என்றும் வேறு ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளனர்.


மு'தஸிலாக்களின் போக்கை கொண்டவர்கள் 


தஜ்ஜாலின் வருகை, மஹ்தியின் வருகை, யஜூஜ் மஜூஜ், சந்திரன் பிளந்தது, கபுர் வேதனை போன்ற விஷயங்களில் மு'தஸிலாக்களின் போக்கை கொண்டவர்கள், இது போன்ற பல விஷயங்களை இவர்கள் அறிஞர்கள் என்று மதிக்ககூடியவர்கள் மறுத்து இருக்குறார்கள், அவர்கள் அப்படி மறுக்கவில்லை என்று வாயளவில் சொல்லுவார்கள், ஆனால் இவர்களுடைய மார்க்க உரைகளிலோ, நூற்களிலோ இது போன்ற செய்திகளை காணமுடியாமல் இருப்பது அவர்களும் அவர்களுடைய அறிஞர்கள் இருக்கும் அதே கருத்தில் தான் இருப்பவர்கள் என்று புரிந்துகொள்ளமுடியும்.

ஹிஸ்புத் தஹ்ரீர் பகிரங்கமாகவே ஹதீஸுல் ஆஹாதை அகீதா விஷயத்தில் மறுப்பவர்கள்.

அல்லாஹ்வின் பண்புகள் பற்றி இவர்கள் எந்த அகீதாவில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது, இவர்களில் சிலர் ஸலாபியா அகீதாவில் இருந்தாலும் அதை பகிரங்கமாக சொல்லமாட்டார்கள். இவர்களாக அகீதவுக்கு கொண்டுவந்துள்ள ஆட்சி பகுதியை தவிர வேறெந்த பகுதியையும் பெரிதாக எடுக்கவே மாட்டார்கள்.

உதாரணமாக: மவ்லான மவ்தூதி தனது ரசாஇல் வல் மசாஇல் (பக்கம்: 57) எனும் நூலில் தஜ்ஜாலின் வருகையை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தையை கிண்டல் செய்வது போல் சில வார்த்தைகளை பயன்படுத்தி தெளிவாகவே மறுக்கிறார்.


ஷீயாக்களை ஆதரிக்கும் போக்குடையவர்கள்


ஒருவர் இஸ்லாமிய ஆட்சியை முற்படுத்தி பேசிவிட்டால், அவர் என்ன கொள்கையில் இருக்கிறார் எனேல்லாம் பார்க்கமாட்டார்கள் அவர்களை புகழ்ந்து அவர்களை பற்றி சமூகத்திற்கு மத்தியில் நல்ல மதிப்பு ஏற்படும் விதத்தில் எழுதுவார்கள்.

இன்றைய ஷீயாக்கள் காபிர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அது வேறு ஒரு மதம். ஆனால் இவர்களோ சுன்னி முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் மத்ஹபுகளை போன்று இன்னுமொரு மத்ஹப் என்ற தோற்றத்தை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துகிறார்கள்

ஷீயாக்களை பற்றி நல்ல எண்ணங்கள் ஏற்படுத்தும் விதமாக கட்டுரைகளை எழுதி ஷீயாக்களை இலங்கைக்கு அறிமுகபடுத்தினதே ஜமாத்தே இஸ்லாமி தான். 1979 ஆம் ஆண்டு அல் ஹஸனாத் சஞ்சிகைகளை படித்தால் அறிந்துகொள்ளல்லாம்.


நபிமார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிப்பதும் குறைகூறுவதும்.


நபி தாவூத் (அலைஹி ஸலாம்) அவர்களையும் நபி மூஸா (அலைஹி ஸலாம்) அவர்களையும் பற்றி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் மு'ஆவியா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களை முனாபிக் என்றும் இவர்கள் அறிஞர்கள் என்று மதிக்ககூடியவர்கள் எழுதியுள்ளார்கள்.

உதாரணமாக: மூஸா (அலைஹி ஸலாம்) அவர்களை பற்றி செய்யித் குதுப் தனது தஸ்வீர் அல் பன்னீ பில் குர்ஆன் (28:15) என்ற நூலில் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
மூசாவை எடுப்போம்; அவர் ஒரு கோத்திர வெறி பிடித்த தலைவருக்கு உதராணம்
ஸஹாபாக்களை குறை சொல்லுவது மட்டுமே அவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரம்.


ஹவாரிஜ் கொள்கை உள்ள, மு'தஸிலா மன்ஹஜ் உள்ள, ஷீஆக்களை ஆதரிக்கும் இயக்கங்களாகவே இவை இருக்கின்றனர்.

இவ்வாறான வழிகேடுகளில் இருந்து எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக

No comments:

Post a Comment