Friday, January 22, 2016

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கட்டுரைக்கான பதில்


இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ஷீஆஇஸத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஜனவரி 2016 அல்ஹஸனாத் சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதிருந்தார். அதற்கு பதிலாக இந்த ஆக்கத்தை கருதலாம்.

என்னால் முடிந்தவரை உஸ்தாத் அவர்களின் அறிவையும் மார்க்கபற்றையும் மதித்து பணிவுள்ளவனாக எழுதி இருக்குறேன். எனது வார்த்தைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் என்னை மன்னித்துகொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாகவே ஆட்சி பற்றி பேசும் இயக்கங்கள் ஷீஆக்களை ஆதரித்து, அவர்களை அஹ்லுஸ் சுன்னஹ்க்களுக்கு மத்தியில் உள்ள ஒரு மத்ஹப் போல் கருதுவது உலகம் அறிந்த உண்மை. ஆட்சி பற்றி பேசும் இயக்கங்கள் விட்ட மிகப்பெரும் ஒரு தவறுகளில் ஒன்று தான் ஆட்சி கோஷத்தை கையில்எடுத்தவர்களைஎல்லாம் ஆதரிக்க முற்பட்டமை, அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமை பெரும் தவறாகும். அவர்கள் என்ன அகீதாவில் இருக்கிறார்கள்?, அவர்களுடைய மன்ஹாஜ் என்ன? என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் "இஸ்லாமிய ஆட்சி ...." என்று யாரு கோஷம் எழுப்பினாலும் அவர்களை ஆதரிக்க முற்படுவார்கள். 

உதாரணமாக: அஹ்மத் நஜாதி ஈரானின் ஜனாதிபதியானதும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அல்ஹஸனாத் சஞ்சிகையானது அவருக்கு வாழ்த்து சொல்லி தெரிவித்து "இரும்புமனிதர் ஈரானில் அணுபுரட்சி; இஸ்ரேலை உலகப் படத்திலிருந்து அகற்றவேண்டும் என சூளுரைத்தவர்" என்றெல்லாம் எழுதியது.

அஹ்மத் நஜாதி யாரு? அவருடைய கொள்கை என்ன? பிடல் கஸ்ட்ரோவும் இப்படிதானே சீறுகிறார்? இவ்வாறு பேசினால் அது இஸ்லாமாகி விடுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் வாழ்த்து தெரிவிப்பது.

முதலாவதாக, அந்த கட்டுரையின் தலைப்பு "இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ..." இது ஒரு வரையறைக்கு உற்பட்டத்தபட்ட தலைப்பு, ஆதாவது இலங்கையில் உள்ள ஜமாத்தே இஸ்லாமி பற்றி மட்டும் தான் உஸ்தாத் அவர்கள் பேசபோகிரார்கள் என்பது புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த தலைப்பை இலங்கைக்குள் வரையறுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றனர்.

1. வேறு நாடுகளில் உள்ள ஜமாத்தே இஸ்லாமி அமைப்புகளின் செயலுக்கு உஸ்தாத் அவர்கள் பொறுப்பு இல்லை.
2. ஏனைய நாடுகளில் இருக்கும் ஜமாத்தே இஸ்லாமி அமைப்புகள் ஆதரிக்கின்றது, எனவே அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது கஷ்டம்

முதல் காரணம் நியாயமானது தான். ஆனால் இரண்டாவது காரணத்தை பற்றி தெளிவுபடுத்தலாம் என்று விரும்புகிறேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் பொதுவாகவே ஆட்சி பேசும் இயக்கங்கள் ஷீஆக்களை ஆதரிக்கின்றனர். எனவே ஏனைய நாடுகளில் உள்ள இயக்கங்கள் பற்றி வக்காலத்து வாங்குவது கஷ்டம். நாம் இவ்வாறு ஒரு கட்டுரை எழுத நேரிட்டால் "ஸலபிகள்/தவ்ஹீத் வாதிகள் ஷீஆஇஸத்தை ஆதரிக்கின்றார்களா?" என்று தலைப்பிடுவோம், ஏனெனில் ஸலபிகள்/ தவ்ஹீத் வாதிகள் ஒரு போதும் ஷீஆக்களுக்கு ஆதரவு வழங்க போவதில்லை [இன்ஷா.அல்லாஹ்], ஆனால் இவர்களுக்கு அவ்வாறு எழுதமுடியாது. எனவே அந்த இரண்டாவது காரணத்தை புரிந்துகொள்வது முக்கியம்.


இப்போது உஸ்தாத் அவர்களின் கட்டுரைக்கு வருவோம்.

கட்டுரையின் ஆரம்ப பகுதியில் ஜமாத்தே இஸ்லாமியின் வளர்ச்சியின் மீது எமக்கு காழ்புணர்வு இருப்பதாலையே நாம் அவர்களிடம் அந்த நடந்த சம்பவங்கள் பற்றி என்ன? ஏது? கேற்காமல் மக்களுக்கு மத்தியில் இப்படி விமர்சித்தோம் என்று உஸ்தாத் அவர்கள் குற்றம்சாட்டுகிறார். இப்படி சொன்ன அவரே எம்மிடம் ஏன் அப்படி விமர்சிக்கிறீர்கள் என்று கேற்காமல் தான் இந்த கட்டுரையை எழுதி எம்மை விமர்சித்து இருக்கிறார் ஆனால் அதற்கு "காழ்புணர்வு" என்று போலியாக வாய்க்குவந்தபடி குற்றம்சுமத்த நாம் விரும்பவில்லை. மக்களுக்கு முன்வைப்பதன் நோக்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தி எச்சரிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் 


அந்த கட்டுரையில் இரண்டே இரண்டு சம்பவங்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுத்து இருந்தார்.

முதலில் 1979 ஆண்டு ஈரானில் நடந்த ஷீஆக்களின் புரட்சியை பற்றி அல்ஹஸனாத் சஞ்சிகையில் வந்த கட்டுரை சம்பந்தமாக தெளிவுபடுத்தி இருந்தார்.

அதில் உலக முஸ்லிம்கள் எல்லோரையும் போல் அவர்களும் ஷீஆக்களின் ஈரானிய புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக நம்பி ஏமாற்றம் அடைந்து விட்டதால் தான் அந்த தவறு நடக்க காரணம் என்பது அவர் கொடுத்த விளக்கத்தின் சுருக்கம்.  அது தவறு என்று ஒப்புகொண்டது உஸ்தாத் அவர்களின் உயர்ந்த குணத்தை வெளிபடுத்தியது.

ஆனால் முஸ்லிம்கள் எல்லோரையும் போல் என்ற மாரியான வார்த்தை பயன்படுத்தியது பொருத்தமற்றது. ஏனெனில் சிலர் மௌனமாகவும் இருந்தனர், ஆட்சி பேசும் இயக்கங்களின் ஈரான் புகழ்ச்சி பிரச்சாரத்தின் காரணமாக மனதளவில் இஸ்லாமிய ஆட்சி ஒன்றின் வருகையை விரும்பி இருந்தாலும் அதிகமானோர் மௌனமாக தான் இருந்தனர், ஆட்சி பேசும் இயக்கங்களே புகழவும் ஆதரிக்கவும் முற்பட்டனர்.

1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த புரட்சி ஷீஆக்களின் புரட்சி என்பது புரட்சி நடந்து குறுகிய காலதுலையே தெரியவந்து விட்டது என்று உஸ்தாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ஷீஆக்களின் கொள்கையை இலங்கையில் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து மார்ச் 1983 அல்ஹஸனாத் இதழில் ஷீஆக்களின் பிழையான கொள்கையை தெளிவுபடுத்தி ஒரு கட்டுரை எழுதி இருந்தது ஜமாத்தே இஸ்லாமி ஷீஆக்களை ஆதரிக்கவில்லை என்பது போதுமான சான்றாகும் என்ற கருத்தை உஸ்தாத்சொல்லிருக்கிறார்.

"ஈரானில் ஒரு வருடம்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1997 அல்ஹஸனாத் இதழில் ஷீஆக்களின் கொள்கைகளையும் அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பற்றியும் எழுதி இருந்தது. [அந்த கட்டுரை ஜனவரி 2016 அல்ஹஸனாத் இதழிலும் மீண்டும் பதியபட்டிருந்தது]

ஆனால் அந்த கட்டுரையில் ஷீஆக்களின் கொள்கை பிழை என்று எழுதப்படவில்லை, மாறாக அது சுன்னிகளின் கொள்கைக்கும் ஷீஆக்களின் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் ஒரு கருத்தாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 1983ஆம் ஆண்டு ஷீஆக்களின் கொள்கை பிழை என்று தெளிவுபடுத்தி இருந்தாலும் மார்ச் - மே 1999 அல்ஹஸனாத் சஞ்சிகையில் "முஹர்ரம் தரும் நினைவுகள்" என்ற தலைப்பில் மீண்டும் கொமைனியையும் ஷீஆக்களை ஈரானையும் புகழ்ந்து சுன்னிகளையும் சுன்னி ஆட்சியாளர்களையும் இகழ்ந்து சஞ்சிகையின் ஆசிரியர் பக்கத்தில் ஒரு கட்டுரை வந்திருந்தனர்.
அதில் இருந்த ஒரு வசனத்தை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
"... ஏனினும் 1924ஆம் ஆண்டுவரை ஏதோ ஒருவகையில் உலகில் தோன்றிய முஸ்லிம்களின் கிலாபத் திட்டமிட்டு முடிவுக்கு கொண்டுவரபட்டனர், இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் சிறு சிறு நாடுகளாக கூறுபோட பட்டு மன்னர்கள் இரானுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்ட்கள் போன்ற முஸ்லிம் பெயர் தான்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கிலாபத் மறைந்து 75 முஹர்ரங்கள் வந்து சென்றுவிட்டனர் நபி பேரர் உணர்வில் வளர்ந்து வாழ்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயதுள்ளஹ்களின் ஆட்சி ஒன்றை அடைந்துகொண்டது. மன்னர்களுக்கு தலைசாய்த்து பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைதுவத்தில் ஆழ்ந்துகிடக்கிறது. புரட்சிகுளுக்கள் எல்லாம் ஹுஸைன் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களின் முடிவையே எதிர்நோக்கி வருகின்றனர்." 

இப்போது சில கேள்விகள் எழுகின்றனர்.
கொமைனியின் புரட்சி ஷீஆக்களின் புரட்சி என்று குருகியகாலதுலையே தெரியவந்தது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், 1983ஆம் ஆண்டு ஷீஆக்களின் கொள்கைகள் பிழையானது என்று கட்டுரை எழுதியாதாக சொன்னீர்கள், 1997ஆம் ஆண்டு ஈரானில் உள்ளவர்கள் ஷீஆக்கள் தான் என்று தெளிவாக தெரிவிக்கும் விதமாக"ஈரானில் ஒரு வருடம்" என்ற கட்டுரையை வெளியிட்டீர்கள். பின்னர் ஏன் மறுபடியும் 1999ஆம் ஆண்டு கொமைனியையும் ஷீஆக்கலையும் ஆதரித்து எழுதினீர்கள்? தெரிந்த பின்பும் ஆதரித்து இருக்குறீர்கள் அல்லவா?

ஷீஆக்கள் மட்டும் தானா நபி பெரர்களின் உணர்வில் இருக்கிறார்கள்? சுன்னிகள் அந்த உணர்வில் இல்லையா?
ஏன் சுன்னிகளையும் சுன்னி ஆட்சியாளர்களையும் கேவலபடுத்தி எழுதினீர்கள்? 



இரண்டாவதாக உஸ்தாத் அவர்கள் தெளிவுபடுத்த முற்பட்ட சம்பவம் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் ஷீஆக்கள் சம்பந்தமாக கொடுத்த இருந்த பெட்டியை 2008 அக்டோபர் அல்ஹஸனாத் இதழில் போட்டமை.

 யூசுப் அல் கர்ளாவி அவர்கள் எகிப்தில் ஷீஆக்களை விமர்சித்து பேசி இருந்தார் அதனை ஈரானை சேர்ந்த ஷீஆ மதகுறு ஒருவர் விமர்சித்து இருந்தார். தனது பின்வாங்கி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கொடுத்த பேட்டியை தமிழில் வெளியிட்டார்கள். இது தான் உஸ்தாத் அவர்கள் அந்த சம்பவத்துக்கு கொடுத்த விளக்கம்.

இது சரியான பதில் அல்ல. யூசுப் அல் கர்ளாவி விமர்சித்ததை வெளியிடாமல் பின்வாங்கியதை வெளியிட்டிருக்கிறார்கள், அதாவது கர்ளாவி அவர்கள் கடும்போக்கு வாதிகள் போல் ஷீஆக்களை காபிர்கள் என்று சொல்லமாட்டோம், மாறாக அவர்களை பித்அத்வாதிகள் என்றே சொல்கிறோம்" என்று சொல்கிறார்.

ஜமாத்தே இஸ்லாமி அங்கீகரித்த கருத்தை தானே வெளியிடுவீர்கள்? அப்படி இருக்கும் போது யூசுப் அல் கர்ளாவி இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பித்அத்களும் உள்ளன என்பதை மறந்து விட்டு வெறுமனே பித்அத்வாதிகள் என்று சொல்கிறார். இதனை அங்கீகரிக்கிறீர்களா? என்று தான் எமது விமர்சனம் அமைந்தது, அது உங்கட கருத்தா? அல்லது யூசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்தா என்று கேற்கவில்லை.

ஜமாத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் யாரும் ஷீஆவாக போகவில்லை என்று ஒரு வாதம் வைத்தார், ஜமாத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் யாரும் போகவில்லை ஆனால் ஆட்சி சிந்தனை கொண்டவர்கள் தான் போகிறார்கள். ஆட்சி சிந்தனையை ஜமாத்தே இஸ்லாமியும் ஊட்டி வருகிறது என்பதை யாரும் அறிவர்.

காலத்தின் தேவை என்று வீணாக அரசியல் கற்றுகொடுக்காமல், சரியான அகீதாவை கொஞ்சம் கற்றுகொடுத்தால் குப்ரான ஷிர்க்கான நம்பிக்கைகள் வரும் போது அவனாகவே அது பிழை என்பதை புரிந்துகொள்வான்.


கடைசியாக, எமது இத்தகைய விமர்சனங்களின் நோக்கம்  ஜமாத்தே இஸ்லாமியில் உள்ள முந்தைய உறுப்பினர்கள் செய்த தவறுக்காக தற்போது உள்ள உறுப்பினர்களை குற்ற உணர்வு கொள்ளவைப்பது அல்ல,

போலி இயக்க தூய்மை பேசவேண்டாம், வீணாக அரசியல் கற்று கொடுக்கவேண்டாம், கற்றுகொடுத்ததன் விளைவை பாருங்கள், அகீதாவை கற்றுகொடுங்கள், மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தூண்டவேண்டாம் என்பதே எமது விமர்சனங்களில் நாம் சொல்லவரும் கருத்து.

அண்மைகாலமாக இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ஷீஆ கொள்கையின் விபரீதத்தை புரிந்து அதற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுப்பது போல் தெரிகிறது, அது வரவேற்க தக்கது, அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக.

எம்மனைவரையும் வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.


குறிப்பு: தவ்ஹீத் உலமாக்களில் யாருமே பதில் சொல்ல முற்பட்டது போல் தெரியவில்லை, எனவே தான் நானே பதில் சொன்னேன். தவ்ஹீத் உலமாக்களுக்கு பதில் சொல்லுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment