Thursday, May 11, 2017

காபிர்களை விட்டு விலகுதல்



ஷெய்ஹ் ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ் ஆலஷெய்ஹ் அவர்கள் தனது "பித்னா காலங்களில் ஒரு முஸ்லிமின் நிலை (எப்படி இருக்கவேண்டும்) குறித்து ஷரிய்யாவின் அடிப்படைகள்" என்ற நூலில் எட்டாவது அடிப்படையாக சொன்னதை முடியுமானவரை சுருக்கமாக முன்வைக்கலாம் என்று நினைக்குறேன்.


"காபிர்களை விட்டு விலகுவது" என்பது ஒரு முக்கியமான ஒரு அடிப்படை. ஷரிய்யாவில் இது குறித்து இரண்டு வெவ்வேறு அருத்தம் தரும் வார்த்தை பிரயோகங்களை காணலாம். பலர் தவல்லி மற்றும் முவலாத் என்ற இவ்விரண்டு வார்த்தைகளை தவறாக புரிந்து இருக்கிறார்கள்

தவல்லி - இது குப்ராகும் 
முவலாத் - இது தடுக்கப்பட்டது 
இஸ்திஆனா (உதவி கோருவது) - இது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது


தவல்லி 



நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். [குர்ஆன் 5:51]

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தை - தவல்லி - இது முழுமையான நேசத்தை குறிக்கும். அதாவது அவர்களுடைய மார்க்கத்துக்காக நேசிப்பதையும், முஸ்லிம்களை காபிர்கள் யுத்தத்தில் மிகைப்பதில் மனம் திருப்தியடைவதையும் இது குறிக்கும். இதனை தான் அல்லாஹ் குப்ர் என்று சொல்கிறான்.


முவலாத்


 
இது காபிர்களுடன் உலக ஆதாயங்களுக்காக விரும்புவதையும் நற்பு வைப்பதையும் முன்னுரிமை கொடுப்பதையும் குறிக்கும். இது குப்ர் அல்ல மாறாக பாவமாகும்.

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் (இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும்) உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார். [குர்ஆன் 60:1]

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தை -முவலாத் - ஆரம்பத்தில் அல்லாஹ் "ஈமான் கொண்டவர்களே ..." என்று அழைக்கின்றான், அந்த அழைப்புலையே பிரியத்தின் காரணமாக காபிர்களுடன் உறவாடியவர்களையும் உள்ளடக்குகிறான். எனவெ அந்த செயல் குப்ர் அல்ல, மாறாக அது பாவமாகும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

எனவே தான் உலக நன்மைகளுக்காக முஸ்லிம்களின் ரகசியத்தை காபிர்களுடன் பகிர முயற்சி செய்த ஹாதிப் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் "நான் குப்ரை நேசித்தோ அல்லது எனது மார்க்கத்தை வெறுத்தோ இதனை செய்யவில்லை" என்று காரணம் சொன்னார்கள். 

உலக காரணங்களுக்காக ஒரு காபிரை நேசிப்பது குப்ர் அல்ல என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.

இன்றைக்கு வெருமனே காபிர்களுடன் கூட்டு சேருவதற்காக தக்fபீர் செய்பவர்கள், தக்fபீரில் எல்லை மீருபவர்பள் என்பதையும் அவர்கள் ஹவாரிஜ்களின் வழியில் சென்றுக்கொன்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்!

அல்லாஹ் மிக அறிந்தவன்

No comments:

Post a Comment