Saturday, December 21, 2013

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

TNTJ என்ற அமைப்பின் ஒரு ஆய்வின் முடிவாக சொல்லப்படும் அறிஞர் PJ உடைய இந்த ஆய்வின் ஒரு முடிவு சூனியம் என்று ஒன்று இல்லை, இன்னும் சில இடங்களில் சூனியம் என்றால் மேஜிக். இதில் எது அவர்களுடைய இறுதி நிலைபாடு என்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும் ......
இந்த ஆய்வை SLTJ என்ற அமைப்பு எந்த ஒரு மீல்பரிசீல்னையும் இல்லாமல், ஏன், அறிஞர் PJ செய்தது உண்மைலேயே ஒரு ஆய்வு தானா? என்று கூட பார்க்காமல் "செவிமடுத்தோம், கட்டுப்பட்டோம்" என்று செயலால் நிருபிக்கும் விதத்தில் அதை ஏற்று பின்பற்றிவருகிறார்கள், இதற்கு தக்லீத் என்று பெயர் சூட்டுவதை அவர்கள் விரும்பாத காரணத்தால் அந்த வார்த்தையை தவிர்த்து கொள்கின்றேன்.


"சாதனங்கள் இன்றி தாக்கம் ஏற்படுத்த கூடிய ஆற்றல் இறைவனுக்கு மாத்திரமே உரியது, எனவே சூனியக்காரன் சாதனங்கள் இன்றி தாக்கம் செலுத்துவான் என்று நம்புறது ஷிர்க் ஆகும். அப்டி நம்புகின்றவர்கள் முஷ்ரிக் ஆகிவிட்டார்கள். சூனியம் இருந்தால் செய்து காட்டவேண்டியது தானே...?" போன்ற சில வாதங்களை முன் வைக்கிறார்கள்.

சகோதரர்களே...!
முதல்ல ஒரு அடிப்படையை புரிது கொள்ளவேண்டும். "மார்கத்தின் அடிப்படை 'ஆதாரம்', வாதங்கள் அல்ல" இதை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள், ஒருவர் வாதங்கள் வைக்கிறார் என்பதற்காக அது சரி ஆகிவிடாது.

அடுத்து சூனியத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு புறச் சாதனங்கள் தெரியவில்ல என்பதால் சாதனங்களே இல்லை என்று ஆகிவிடாது
புரிந்துகொள்ள முடியவில்லை, என்று தான் அருத்தமாகுமே தவிர, சாதனங்களே இல்லை என்று ஆகிவிடாது.


அதை சில வேலை விஞ்ஞானம் கண்டுபிடிக்கவும் கூடும், கண்டுபிடிக்காமல் இருக்கவும் கூடும். இவர்களில் அதிகமானவர்கள் குர்'ஆன் ஹதீஸை விட விஞ்ஞானத்தை நம்புவதால் இந்த ஒரு விளக்கத்தையும் பதிவு செய்து கொள்கின்றேன்.

சகோதரர்களே...!
நாங்கள் இவர்கள் வாதங்களுக்காக சொல்லுவதை போன்று நாங்கள் நம்புவதில்லை. எங்களுடைய நம்பிக்கை "சூனியத்தால் பாதிப்பு உண்டாக்க முடியும்" என்பது தான் ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் என்ன வென்றால் அந்த பாதிப்பு "அல்லாஹ் நாடினால் தான் நடக்கும்"

இதற்கு ஆதாரம்
அல் குர்'ஆன் 02:102 
மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

இந்த வசனத்தில் அல்லாஹ் அவன் நாடினாலே தவிர சூனியத்தால் பாதிப்பு உண்டு பண்ண முடியாது என்று தெட்ட தெளிவாக சொல்லி இருக்கிறான். எனவே இப்டி நம்புவதால் அல்லாஹ்வின் ஆற்றலை சூனியகாரனுக்கு கொடுத்தாக ஆகிவிடாது.

புரிந்து கொள்வதற்காக இன்னுமொரு உதாரணத்தை சொல்கிறேன்.
குர்'ஆனில் அல்லாஹ் நபிமார்கள் செய்த அற்புதங்களை சொல்கின்றான்.

அல் குர்'ஆன் 14:11
அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) யாதொரு ஆதாரமும் நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை" (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும்,
இந்த வசனத்திலும் அல்லாஹ் முன்னர் குறிப்பிட்ட வசனத்தில் பயன்படுத்திய அதே (இல்லா பி'இத் நில்லாஹ்) إِلَّا بِإِذْنِ اللَّهِ என்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துறான். ஆதாவது நபிமார்கள் அற்புதங்கள் செய்ததெல்லாமே அல்லாஹ்வின் நாட்டத்தோடு தான்,

ஆனால் இந்த நபிமார்களின் அற்புதம் சம்பந்தப்பட்ட இடங்களில் இந்த வசனத்தை புரிந்து கொண்டவர்கள் ஏன் சூனியத்திலும் அப்படி புரிந்து கொள்வதில்லை?

வார்த்தை பாவனைகள் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்.
 — 

No comments:

Post a Comment