Tuesday, October 15, 2013

கட்டுபடுதல் என்பதே வணக்கமா? : ஜமாத்தே இஸ்லாமியின் பிழையான அடிப்படை

         
   
"வணக்கத்திற்குரிய நாயகனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாம் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையில் அவர் சொல்லவந்த பிரதான கருத்து "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்பதை தான். இந்த கருத்து முதலில் சொன்னவர் ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் அபுல் அ'லா மௌலான மௌதூதி அவர்கள் தான்.
முதலில் சொன்னவர் என்று நான் சொன்ன உடனயே இதற்கு முன் எந்த அறிஞரும் சொல்லவில்லை என்பதையும், நபி (சள்ளள்ளஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கற்று தரவில்லை என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஜமாத்தே இஸ்லாம் சகோதரர்கள் நடாத்தும் வகுப்புகளிலும் இந்த கருத்து மக்களுக்கு கற்பிக்க படுகின்றது என்பதையும் மக்களுக்கு எச்சரித்து தான் ஆகணும்.

இந்த கருத்தை மௌலான மௌதூதி முன்வைக்க காரணம் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவரவேண்டும் அதற்காக மக்களை உளைக்கவைக்க வேண்டும் எனபது தான். அவருடைய எண்ணங்கள் நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம் ஆனால் இந்த கருத்து பிழையான ஒரு கருத்து என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் உரைக்கான மறுப்பாகவே பதியவிரும்புறேன்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தன்னுடைய உரையில் "ஒருவருக்கு கட்டுபடுவது அவரை வணங்குவதாகும் (ஷிர்க்); உதாரணமாக சீதனம் எடுக்க கூடாது எனபது அல்லாஹ்வின் சட்டம், ஒருவனை தனது தாய் தந்தையர்கள் சீதனம் எடுக்குமாறு வலியுறுத்தும் போது அவர்களுக்கு அவன் கட்டுப்பட்டால், அவன் தனது தாய் தந்தையர்களை வணங்குகிறான்..." என்று கூறினார்.

சீதனம் எடுக்க கூடாது என்பது அல்லாஹ்வின் சட்டம் என்று அறிந்து அதை அற்று, ஒருவன் தன் தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டு சீதனம் எடுத்தால் அவன் பாவியாக கருதபடுவான் என்று தான் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் போதனைகள் இருக்கின்றது. அவன் முஷ்ரிக்காக கருதபடமாட்டான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

உஸ்தாத் அவர்கள் அவர்களுடைய உரையில் முன்வைத்த இரண்டு ஆதாரங்களை நோக்குவோம்.

முதல் ஆதாரம் 

"இவர்கள் (யூதர்களும் நசாராக்களும்) அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிமார்களையும் சந்நியாசிகளையும் தங்கள் கடவுள்களாக எடுதுகொண்டிருக்கின்றனர் ....."  [குர்'ஆன் 9:31] 

"..... ஒருமுறை அதி பின் ஹாதிம் (ரலி அல்லாஹு அன்ஹு) [முன்னர் கிறித்துவத்தில் இருந்தவர்] நபியவர்களை சந்தித்த போது 
'இவர்கள் (யூதர்களும் நசாராக்களும்) அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிமார்களையும் சந்நியாசிகளையும் தங்கள் கடவுள்களாக எடுதுகொண்டிருக்கின்றனர் .....' என்ற வசனத்தை ஓதி கொண்டிருந்தார்கள். 

அதை கேட்டதும் அதி: 'அவர்கள் அவர்களை வணங்கவில்லையே?' என்று வினவினார். 

அதற்கு நபியவர்கள் : ஆம் (அவர்கள் வணங்கினார்கள்), அவர்கள் (பாதிரிமார்களும் சந்நியாசிகளும்) அல்லாஹ் ஹாராமாக்கியத்தை ஹலாலாக்கினார்கள், அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கினார்கள், அதற்கு அவர்கள் (யூதர்களும் நசாராக்களும்) கட்டுபட்டார்கள், அப்படி தான் அவர்கள் வணங்கினார்கள் [திர்மீதி]

மேல் உள்ள வசனத்தையும் அதற்கு விளக்கமாக அமைந்துள்ள இந்த ஹதீஸையும் வைத்து கட்டுபடுதல் என்றாலே வணக்கம், எனவே அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டத்துக்கு கட்டுபடுவது அவர்களை வணங்குவதாக (ஷிர்க்) ஆகிவிடும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஆனால் அந்த குரான் வசனத்திலோ ஹதீஸிலோ அந்த விளக்கம் இல்லை, பாதிரிமார்களும் சந்நியாசிகளும் பிளையானத்தை (ஹராமானத்தை)  ஏவினார்கள் அதற்கு கட்டுபட்டார்கள் என்று நபியவர்கள் சொல்லி இருந்தால் உஸ்தாத் சொல்லுவது போல் கட்டுபடுதல் என்றாலே ஒரு வணக்கம் என்ற விளக்கத்தை பெறலாம்.

ஆனால் அந்த ஹதீஸில் நபியவர்கள் சொல்லுவதெல்லாம், பாதிரிமார்களும் சந்நியாசிகளும் ஹராமானத்தை ஹலாலாக்கினார்கள், ஹலாலானதை ஹராமாக்கினார்கள், அதற்கு இவர்கள் கட்டுப்பட்டதால் அது வண்ணக்கம் (ஷிர்க்) ஆகிவிட்டது. அதாவது அல்லாஹ்வின் சட்டத்தை விட்டு வேறு ஒரு சட்டத்தை ஏற்றதால் அவர்கள் அந்த சட்டத்தை இயற்றியவரை வணங்கினார்கள் என்று தான் நபியவர்கள் சொல்கிறார்கள்.

ஒருவன் அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்றிருக்கும் நிலையில், ஈமானின் பலகீனம் காரணமாக அவன் வேறு ஒருவர் சொல்லும் சட்டத்துக்கு கட்டுப்பட்டால் அவன் ஒரு பாவியாக தான் கருதபடுவான். அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுவிட்டு அவன் வேறு ஒரு சட்டத்தை அவனுடைய மார்க்கமாக/வாழ்க்கையாக ஏற்று கட்டுபாட்டால் தான் அவன் ஷிர்க் செய்ததாக கருதலாம்.

இரண்டாம் ஆதாரம். 

"தன (இழிவான) இச்சையையே கடவுளாக எடுத்துகொண்டவனை (நபியே) நீர்பார்தீரா? அத்தகையவனுக்கு நீர் பாதுகாப்பு வழங்குவீரா?" [குர்'ஆன் 25:43]

இந்த வசனத்தை முன்வைத்துவிட்டு மனோ இச்சைக்கு கட்டுபடுவது மனோ இச்சையை கடுவளாக ஏற்பது என்று கட்டுபடுதல் என்றாலே வணக்கம் என்ற பிழையான கருத்தை கூறினார்.

ஆனால் மனோ இச்சைக்கு கட்டுபடுவது தான் அவன் மனோ இச்சையை கடவுளாக ஏற்க காரணம் என்பதற்கு அந்த வசனத்தில் ஆதாரமில்லை. இந்த வசனம் சொல்லுவதெல்லாம் மனோ இச்சையின் படி தனது வாழ்க்கைமுறையை அமைத்தவன் அல்லது தனது மனோ இச்சையின் படி மார்க்க சட்டங்களை அமைத்தவன், அதை பின்வரும் குர்'ஆன் வசனத்தில் புரிந்துகொள்ளலாம்.

"இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றி தன் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட மிக வழிகெட்டவன் எவன் இருக்கின்றான்? நிச்சையமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான் [குர்'ஆன் 28:50] 

இந்த வசனத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் நேர்வழி இல்லாமல் தன் மனோ இச்சையை பின்பற்றியவன் என்று சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் சட்டமின்றி தன் மனோ இச்சை படி வாழ்க்கை முறையை அமைதுகொண்டவன் அல்லது தன் சட்டங்களை தனது மார்க்கமாக அமைதுகொண்டவன் என்று புரிந்துகொள்ளலாம்.

ஒருவன் அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று இருக்கும் நிலையில் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டால் அவன் ஒரு பாவியாக தான் கருதபடுவான். எனவே தான் நபியவர்கள் விபச்சாரத்தை பாவம் என்று சொன்னார்கள், விபச்சாரம் ஷிர்க் என்று சொல்லவில்லை.

ஒரு முஸ்லிம் ஷரியாவுக்கு (அல்லாஹ்வின் சட்டத்துக்கு) கட்டுபடுவது ஒரு வணக்கமாக கருதப்படும், ஆனால் அது அல்லாத வேறு ஒன்றுக்கு கட்டுபடுவது எல்லா இடங்களிலும் வணக்கமாக கருதபடுவதில்லை. ஏன் என்றால் கட்டுபடுவதனால் எல்லா இடங்களிலும் சட்டத்தை ஏற்றதாக ஆகாது.

கட்டுபடுதல் என்றாலே வணக்கம் என்ற கருத்தை இவர்கள் முன்வைக்கும் நோக்கம் இஸ்லாமிய ஆட்சி, அதாவது ஒருவன் அல்லாஹ் அல்லாதவரின் சட்டத்துக்கு கட்டுப்பட்டால் அது ஷிர்க் என்று நிருபினால் மக்கள் ஷிர்க்கை விட்டும் தப்புவதற்கு இஸ்லாமிய ஆட்சியை தான் நோக்குவார்கள் காரணம் எமது நாடுகளில் அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டம் தான் நடைமுறையில் உள்ளது.

இவர்கள் சட்டம் என்று மிகவும் அழுத்தம் செலுத்துவது குற்றவியல் சட்டத்துக்கு தான், அதை அவர்களுடைய போக்கிலேயே காணலாம், ஷிர்க் குப்ர் பித்'அத் போன்ற அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டம் நடக்கும் இடங்களில் இருப்பார்கள் அதற்கு எதிராக ஒன்றும் பேச மாட்டார்கள், ஒற்றுமை என்ற பெயரில் கூடவே இருந்து பங்கேற்பார்கள். அந்த இடத்தில அல்லாஹ்வின் சட்டம் பற்றி எந்த கவனமும் இருக்காது. இப்ப கொஞ்சம் முன்னேற்றம் நடந்து சீதனம் போன்றவற்றை கொஞ்சம் எதிர்த்து பேசுகிறார்கள்.

இவர்கள் அறிஞர் என்று மதிக்கும் சிலர் அல்லாஹ் ஹரமாக்கிய இசை போன்ற சில விஷயங்களை ஹலாலாக்கி இருக்கிறார்கள். இவர்களுடைய மார்க்க உரை சம்பந்தப்பட்ட வீடியோக்களில் கூட இசை இருப்பது அதற்கு ஆதாரம்.

இவர்களுடைய இந்த அடிப்படை ஒரு வழிகெட்ட அடிப்படை, ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்கள் இதை பற்றி சிந்திக்கவேண்டும். இஸ்லாமிய ஆட்சியை விரும்பவேண்டும், ஆனால் இவர்கள் சொல்லும் இந்த விளக்கம் பிழையானது.

2 comments:

  1. நீங்கள் சொல்லும் ஆதாரங்களை விட மிகத் தெளிவானதும் வெளிப்படையானதுமான ஆதாரங்களையல்லவா அவர்கள் முன்வைக்கிரார்கள். ஆனால் நீங்கள் ......... இதற்கு இதுதான் பொருள் என உங்களது சொந்தக் கருத்தைத்தானே முனவைக்கிறீர்கள். இதனை எப்படி ஏற்பது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே!
      மீண்டும் ஒரு முறை வாசித்து பாக்குமாறு, மிக தாழ்வுடன் கேட்டு கொள்கின்றேன்.
      இதற்கு இது தான் பொருள் எண்டு எனது சொந்த கருத்தை நான் முன்வைக்கவே இல்லை, அப்டி செய்வதாக இருந்தால் ஒரு போதும் என்னால் ஆதாரத்தின் வசனங்களை குறிப்பிட்டு இருக்கவே முடியாது.
      நான் அவர்கள் காட்டும் ஆதாரத்தின் வசனங்கள் அவர்கள் காட்டுவதற்கு போருந்தில்லை என்று அவர்கள் காட்டும் அந்தந்த ஆதர்ரங்களின் வசனங்களை வைத்தே சொல்லி இருக்கிறேன்.

      நான் ஏற்றுகொள்ளுமாறு நிர்பந்திக்கவில்லை, நிர்பந்திக்கவும் முடியாது, நான் என்னால் முடிந்த அளவு பிழையை சுட்டி காட்டி இருக்குறேன். நீங்கள் இன்னம் கொஞ்சம் ஆய்வு செய்து, முடிவு எடுங்க.

      எம்மை வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

      Delete