Sunday, December 29, 2013

நபி அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புகின்றவர்கள் அநியாயக்காரர்களா?

25:8 ..... என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

இந்த வசனத்தை குறிப்பிட்டு "எனவே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புபவர்கள் அநியாயக்காரர்கள்" என்று வாதங்கள் வைக்கிறார்கள். இந்த வாதத்தை வைக்காமல் இவர்கள் சூனியத்தை பற்றி பேசமாட்டார்கள், அந்த அளவுக்கு இந்த வாதத்தை நம்பி அதை மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இது அவர்கள் முக்கியமாக வைக்க கூடிய வாதம் என்பதால் அதற்கு ஒரு பதிலை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

சகோதரர்களே ......

இந்த வசனத்தை வைத்து அவர்களுடைய வாதத்தை நிலைநாட்டுவதாக இருந்தால், அவர்கள்  முதலில் சூனியத்தால் பாதிப்பு உண்டுபண்ண முடியும் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்த வசனம் அருத்தமற்றதாகவே இருக்கும். சூனியத்தால் பாதிப்பு உண்டுபண்ண முடியும் எனவே தான் அநியாயக்காரர்கள் நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புகின்றார்கள் என்று தான் இவர்கள் சொல்ல வேண்டியிருக்கும். சூனியத்தால் பாதிப்பே இல்லாட்டி, அல்லாஹ்வே மறுப்பு சொல்லியும் இருப்பான், ஆனால் மாறாக அல்லாஹ் அடுத்த வசனத்தில் இவர்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு உதாரணம் சொல்கிறார்கள் என்று தான் சொல்கின்றான். இல்லாத ஒன்றை உதாரணமாக சொல்ல முடியாது, எனவே இந்த வாதத்தை வைப்பதாக இருந்தால் அவர்கள் (அல்லாஹ் நாடினால்) சூனியத்தால் பாதிப்பு இருக்குது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இல்லை சூனியம் என்றால் வித்தை, மேஜிக் என்று சொல்வார்கள்.
சகோதரர்களே இந்த மேல் உள்ள வசனத்தில் "சூனியம் செய்யப்பட்டவர்" என்ற அருத்தத்தில் வசனம் வந்திருக்குது, இதுக்கு வித்தை அல்லது மேஜிக் என்ற விளக்கத்தை கொடுத்து பாருங்கள்.
"வித்தை செய்யப்பட்டவர்" மேஜிக் செய்யப்பட்டவர்" என்று வரும்,
வித்தை செய்பவன், மேஜிக் செய்பவன் என்று கேள்வி பட்டிருப்பீங்க, ஆனால் எங்கையாவது வித்தை செய்யப்பட்டவன், மேஜிக் செய்யப்பட்டவன் என்று கேள்வி பட்டதுண்டா???

இன்னும் சில வேலை சூனியத்தால் அதிகபச்சமாக கணவன் மனைவியை பிரிக்க முடியும் என்று சொல்வார்கள், இந்த விளக்கத்தை  இந்த வசனத்துக்கு செய்துபாருங்கள் "மனைவியை விட்டும் பிரிக்கப்பட்ட ஒரு மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்" என்று வரும், இது என்ன வாதம் என்றே புரியுதில்ல....

இவர்களுடைய வாதங்கள் அனைத்துமே கேலி கூத்தாக தான் இருக்குது ...!!!

இல்லை அந்தந்த இடங்களுக்கு ஏற்ப விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சில வேலை சொல்வார்கள், அப்டி என்ன விளக்கம் இந்த வசனத்துக்கு கொடுக்க முடியும்? என்று அவர்கள் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்குது.

சகோதரர்களே ......
ஒரு வசனத்தை புரிந்துகொள்வதற்கு அதற்கு முன் பின் உள்ள வசனங்களையும், வசனம் இறக்கப்பட்ட சம்பவத்தையும் பார்த்தால் தான் அதை சரியாக புரிந்துகொள்ள முடியும்.

இந்த வசனத்தின் முன் பின் வசனங்களை பாருங்கள்:

25:7. "இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.

25:8. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

25:9. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

சகோதரர்களே...
25:9 ஆம் வசனத்தில் அல்லாஹ் அநியாயக்காரர்கள் "உதாரணம் சொல்கிறார்கள்" என்று ஒருமையில் சொல்லாமல், "உதாரணங்கள்  சொல்கிறார்கள்" என்று பன்மையில் சொல்கின்றான்.
உதாரணங்கள் என்று சொல்வதால் நபி அவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட மற்ற உதாரணங்களை சொல்கின்றவர்களும் அநியாயக்காரர்கள் என்று சொல்லவேண்டும்.

மற்ற உதாரணங்கள் என்ன என்பதை பாருங்கள்: உணவு உண்கிறார், வீதிகளில் நடமாடுகிறார், இவரோடு ஒரு வானவர் பிரச்சாரம் செய்வதற்கு இல்லை, இவருக்கு புதையல் வழங்கபடவில்லை, தோட்டம் இல்லை

இந்த உதாரணங்கள் அனைத்தையும் TNTJ & SLTJ சகோதரர்களும் சொல்லத்தான் செய்கிறார்கள், எனவே அவர்களும் அநியாயக்காரர்களா??? என்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் இல்லை, என்று பதில் சொல்லுவார்கள், சொல்லிவிட்டு, நாம் சொல்லும் நோக்கம் வேறு அநியாயக்காரர்கள் சொன்ன நோக்கம் வேறு என்று விளங்கபடுத்துவார்கள்.

அதாவது நாங்கள் உண்மைலேயே அவர் உணவு உண்கிறார், வீதிகளில் நடக்கிறார் etc ..... என்பதால் சொல்கிறோம்,  ஆனால் அநியாயக்காரர்கள் நபித்துவத்தை மறுக்கவேண்டும் என்ற நோக்கில் சொல்கிறார்கள் என்று சொல்வார்கள்.

அதே பதிலை தான் நாங்களும் சொல்கிறோம், அநியாயக்காரர்கள் நபித்துவத்தை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் அவருக்கு உண்மைலேயே சூனியம் செய்யப்பட்டது (குறிப்பிட்ட சில காலம்/நேரம் பாதிப்பானார்கள்) என்ற அருத்தத்தில் சொல்கிறோம்.

இதை புரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

இந்த வசனத்தை பாருங்கள்:

21:3 ".......அன்றி, இத்தகைய அநியாயக்காரர்கள் (நம்முடைய தூதரைப் பற்றி) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? ......"

இவர்கள் அணுகுவது போல் இந்த வசனத்தை அணுகினால் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களை மனிதர் என்று சொல்கின்றவர் அநியாயக்காரன் ஆகிவிடுவான்.

எனவே, அநியாயக்காரர்கள் நபித்துவத்தை மறுக்கும் நோக்கில் சொல்கிறார்கள், ஆதாவது இவர் நபியல்ல ஒரு சாதாரண மனிதர் என்ற அருத்தத்தில் சொல்கிறார்கள். ஆனால் நங்கள் அவர் உண்மைலேயே மனிதர் என்பதால் சொல்கிறோம்.

இந்த இடத்தில் சரியாக புரிந்துகொண்ட TNTJ & SLTJ மற்ற இடங்களில் ஏன் அவர்களுடைய வாதங்களுக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment