Monday, April 21, 2014

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் : TNTJ & SLTJ அல்லாஹ்வை புரிந்துகொள்ளவில்லை!


அல்லாஹ்வை சரியான முறையில் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டும், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சொல்லுவதை படைப்பினங்களுக்கு ஒப்பிடாமல், எப்படி என்று சொல்லாமல்/கேட்காமல், நம்பவேண்டும், "இது மட்டும்" என்று சொல்லி ஒன்றைக்கூட மறுக்கக்கூடாது. அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக நபி சொல்லி இருக்குறார்கள். அல்லாஹ் எப்படி இறங்குகிறான் என்பது தெரியாது, நிச்சியமாக அல்லாஹ்வின் இறங்குதல் படைபினங்களுக்கு ஒப்பானதல்ல. அல்லாஹ் தன் மகிமைக்கு தக்கவாறு இறங்கி வருகிறான் என்று நம்புவது கடமை.

அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள், நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவின் மூன்றாவது பகுதி இருக்கும் போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்
அறிவிப்பவர் :
அபு ஹுரைரா (
ரலி அல்லாஹு அன்ஹு ), புகாரி:1145

இந்த சஹீஹான ஹதீஸை ஏற்றுகொள்ள தயங்கினார்கள், இப்போது மாற்றுவிலக்கம் சொல்கிறார்கள். அவர்கள் வாதங்கள் என்று என்னக்கூடியவற்றை சொல்லி அல்லாஹ் இறங்கி வருவதை மறுக்குரார்கள்.

அல்லாஹ் இறங்கி வருவதை இதற்குமுன் சிலர் மறுத்தார்கள், அவர்கள் இந்த ஹதீசையும் மறுத்தார்கள். ஆனால் அல்லாஹ் வருவதை குரானிலையும் சொல்லி தான் இருக்கிறான், சந்தர்பம் வேரதாக இருந்தாலும் இறங்கி வருவதை சொல்லி தான் இருக்கிறான்.

"உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது."
குரான் 89:22



TNTJ & SLTJ வைக்ககூடிய வாதங்களை பார்ப்போம்

அல்லாஹ் ஒவ்வொரு இரவும் மூன்றாம் பகுதி இருக்கும் போது இறங்கி வருகிறான் என்று இந்த ஹதீஸில் வருகிறது, உலகத்தில் 24 மணிநேரமும் எங்கையாவது ஒரு இடத்தில் இரவின் மூன்றாம் பகுதி இருக்க தான் செய்து, அல்லாஹ் அர்ஷை விட்டு இறங்கி 24 மணிநேரமும் முதல் வானதிலையே இருக்குறான் என்று ஆகிவிடுமே? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் அல்லாஹ்வை காலத்தாலும் (TIME) இடத்தாலும் (SPACE/CAPACITY) கட்டு படுத்தபட்டவனாக புரிந்திருக்கிறார்கள். நிச்சியமாக அல்லாஹ் காலத்துக்கும் இடத்துக்கும் அற்பால் பட்டவன், அவனே காலத்தையும் இடத்தையும் படைத்தவன். அவன் தான் நாடியதை செய்யக்கூடியவன்!

அடுத்து இவர்கள் வைக்ககூடிய வாதம், அல்லாஹ் இறங்கி வந்தால் அரசுக்கு மேல் இல்லைஎன்று ஆகிவிடுமே?!

ஒரு இடத்தை விட்டும் இன்னொரு இடத்துக்கு சென்றால் முதல் இடம் காளியாகுவது படைப்பினங்களுடைய பண்பு. இவர்கள் அல்லாஹ்வை படைப்பினங்களோடு ஒப்பிட்டு புரிகிறார்கள், எனவே தான் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் அருள் தான் இறங்கி வருகிறது என்று புரியவேண்டும்  
என்று  சொல்கிறார்கள்

ஆனால் அப்படி இவர்கள் தான் சொல்கிறார்கள். ஆனால் ஹதீஸில் ரசூல் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நேரடியாக் "உம்முடைய இரட்சகன்..." என்று நேரடியாகவே சொல்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அல்லாஹ் இறங்கி வந்து பிரார்திப்பவர்களது பிராத்தனைக்கு பதிலளிக்கிறேன், கேட்கின்றவர்களுக்கு கொடுக்கிறேன், பாவமன்னிப்பு கேட்கின்றவர்களுக்கு மன்னிகின்றேன் என்று சொல்லுவதாகவும் ஹதீஸில் இருக்கிறது. எனவே அருள் தான் இறங்கி வருகிறது என்று புரிந்து கொள்ள முடியாது.

இது ஒரு வழிகேடு, மக்கள் இது குறித்து அவதானமாக இருங்கள்.

No comments:

Post a Comment