Tuesday, December 9, 2014

ஹதீஸ்கலையில் மௌலவி பீஜே அவர்களின் தவறான அணுகுமுறை


ஸஹீஹான ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படும என்பதை பற்றி நான் விளங்கபடுத்த வரவில்லை.

நான் வைக்கும் வாதங்கள் ஏற்கனவே எமது தரப்பில் இருக்கும் அறிஞர்களால்  வைக்கப்பட்டதே. நான் அதை ஒரு தனியான பதிவில் பதிவு செய்ய காராணம், இந்த வாதம் எமது தரப்பால் வைக்கப்படும் பிரதான வாதங்களில் ஒண்டு. இந்த வாதம் பலமுறை வைக்கப்பட்டது, ஆனால் TNTJ & SLTJ தரப்பால் கணக்கெடுக்காமல் மறைப்பதற்கு முயற்சி செய்வது போன்று ஒரு சில வார்த்தைகளை சொல்லி விட்டு போகிறார்கள் என்ற காரணமும், இந்த பிரதான வாதம் மற்ற வாதங்களோடு வைக்கபடுவதால் பெரிதாக விளங்குவதில்லை என்று நினைத்தும் இதை தனியாக பதிவு செய்கிறேன்.

மௌலவி பீஜே அவர்கள் சில சஹீஹான ஹதீஸ்களை குரானுக்கு முரண்படுவதாக கூறி அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களில் எந்த குறையையும் சொல்லாமல் [சொல்லவும் முடியாது, ஒரு குறையும் இல்லை] நிறைய ஹதீஸ்களை மறுத்துவருகிறார். கேட்டால் மனிதர்கள் தானே எங்கையாவது தவறு நடந்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஒரு அறிவிப்பில் என்ன தவறு இருந்தாலும் அது அறிவிப்பாளர்களின் காரணமாகவே நடந்து இருக்கும், ஆனால் இப்டி "எங்கையாவது தவறு நடந்து இருக்கலாம்" எண்டு சொல்லிடு போவது யூகமே தவிர, அது அறிவல்ல. எந்த அறிவிப்பாளர் பலகீனமானவர், எந்த அறிவிப்பாளர் பொய்யர் என்று சொல்லவேண்டும். இவர்களால் சொல்லமுடியாது, காரணம் அனைவருமே நல்ல அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள். ஹதீஸை மறுக்கனும்டு முடிவு எடுத்துவிட்டு அதை குரானுக்கு முரண்படுவதாக பொய் காரணம் சொல்கிறார்கள் போல் இருக்குது.

அவர்கள் இப்படி மறுப்பதன் மூலம் அறிவிப்பாளர் வரிசையில் சந்தேகம் ஏட்படுத்துகிரார்கள், சந்தேகம் ஏற்பட்டால்

1. அவர்கள் மறுக்க கூடிய ஹதீஸ்களை அறிவிக்கும் அதே அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுகொள்ள முடியாது! ஏன் ஏற்றுகொள்கிறார்கள்? 

2. இவர்கள் மறுக்க கூடிய ஹதீஸ்களை பதிவு செய்த இமாம் புகாரி, முஸ்லிம், நாசா'ஈ, இப்னு மாஜா, திர்மீதி, etc ...... இன்னம் உள்ள அணைத்த இமாம்களும் அந்த ஹதீஸ்களை அறிவிக்கும் கடைசி அறிவிப்பாளர் ஆவார்கள். எனவே அவர்களுடைய அறிவுப்புகளையும் ஏற்றுகொள்ள முடியாது! ஏன் அவர்களுடைய நூற்களை ஏற்றுகொள்கிறார்கள்? 


அறிவிப்பாளர் வரிசையில் எந்த சந்தேகமும் இல்லாத காரணத்தால் நாம் ஏற்றுகொள்வோம், குரானுக்கு முரண்படுவது போன்று தெரிந்தாலும் அது உண்மையில் முரண்பாடல்ல, அதை முரன்படாதவாறு புரிந்துகொள்ள முடியும் சரியான அகீதவும் சிந்தனையும் இருந்தால்.

ஆனால் மௌலவி பீஜே அவர்களும் அவருடைய இயக்கமாகிய TNTJ & SLTJ ஏற்றுகொல்வதும் அவர்களுடைய கொள்கைக்கே எதிரானது.! ஏன் என்றால் இவர்களுக்கு தான் சந்தேகம் வந்துவிட்டதே எங்கையோ பிழை நடந்து இருக்கலாம் எண்டு

இவர்களுடைய வாதப்படி இவர்கள் அனைத்து ஹதீஸ்களையும் மறுத்து, குரான் மட்டும் போதும் என்று சொல்லி இருக்க வேண்டியவர்கள்! ஏன் ஏனைய ஹதீஸ்களை ஏற்றுகொள்கிறார்கள்?

என்ன காரணம் என்றால்; ஒரு சில ஹதீஸ்களை இவர்களுடைய மனம் ஏற்றுகொள்ள தயங்குகின்றது, அந்த ஹதீஸ்களை மறுப்பதற்கு குரானுக்கு முரண்படுவதாக பொய் காரணம் சொல்லி சமாளிக்கிறார்கள்.


"மனிதர்கள் தானே, ஹதீஸ்களில் தவறு நடக்க கூடுமே..... ஆனால் குரானை அல்லாஹ் பாதுகாட்பதாக பொறுப்பு எடுத்து விட்டானே..." என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் .

மனிதர்கள் தான், தவறு நடக்கும் தான், ஆனால் எந்த அறிவிப்பாளர் தவறு விட்டாரு, அவரிடம் என்ன பலகீனம் உள்ளது என்பது மிக முக்கியம்!

யாரு தவறு விட்டாரு, என்ன பலகீனம் என்று அறியாமல் யூகத்தால் மறுக்க முடியாது. நாம் மறுக்கும் லஈபான, மௌதூ ஆன, ஷாத் ஆன etc ..... எல்லா ஹதீஸ்களிலும் எந்த அறிவிப்பாளர் பலகீனமானவர் அவரிடம் என்ன பலகீனம் உள்ளது என்பதை சொல்லமுடியும், சொல்லுவோம் இன்ஷா.அல்லாஹ் . ஆனால் இவர்கள் மறுக்கும் இந்த சஹீஹான ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் குறை சொல்ல முடியாது.

ஹதீஸின் கிளை அம்சங்களில் தான் தவறு நடக்க வாய்ப்பு இருக்குது, பிரதான அம்சங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. பிரதான அம்சங்களை இட்டுகட்ட தான் முடியும். அந்த கிளை அம்சங்களில் நடக்கும் தவறுகளை கூட யாரு தவறு விட்டாரு, எத்தன காரணமாக அவர் தவறு விட்டார் என்று சொல்ல முடியும்.

பிரதான அம்சங்களை இட்டுகட்டபட்டது  என்று சொல்லவே முடியாது, ஏன் என்றால் அறிவிப்பாளர் அனைவருமே நம்பிக்கையானவர்கள். அப்படியே இட்டுகட்ட பட்டது என்று வைத்தாலும், அப்படி எடுக்கவே முடியாது ஆனால் ஒரு வாதத்துக்கு அப்படியே இட்டுகட்டபட்டது என்று வைத்தாலும் அந்த வாதம் பிழையாகும். ஏன் என்றால் ஒரு அறிவிப்பாளர் வரிசை இருந்தால் அப்படி சொல்லலாம், ஆனால் நம்பிக்கையான, நேர்மையான, மனனத்தில் சிறந்த இரு அறிவிப்பாளர் வரிசை உள்ள ஹதீஸ்களையோ அல்லது பல அறிவிப்பாளர் வரிசை உள்ள முதவாதிரான ஹதீஸ்களையோ எப்படி இட்டுகட்டபட்டது எண்டு சொல்லமுடியும்?

அல்லாஹ் குரானை பாதுகாப்பதாக சொல்லவில்லை, அவன் இறக்கிய திக்ரை பாதுகாப்பதாக தான் சொல்கிறான்.

"நிச்சயமாக நாம் தான் இந்த திக்ரை (நினைவூட்டும் வேதத்தை) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகவலனாகவும் இருக்கின்றோம்" [குரான் 15:9]

குரானுக்கு சொல்லப்படும் இன்னொரு பெயர் திக்ர், ஆனால் அதே பெயர் ஹதீஸுக்கும் குரானில் பாவிக்க படுகின்றது

"..... நபியே! மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு திக்ரை நாம் அருளினோம்" [குரான் 16:44]

மேல் உள்ள வசனத்தில் மனிதர்களுக்கு ஏறக்கபட்டது என்பது குரான், அதை தெளிவுபடுத்துவதற்காக நபியவர்களுக்கு அருளப்பட்ட திக்ர் என்பது ஹதீஸ்

எனவே அல்லாஹ் அவன் இறக்கி வைத்த திக்ரை பாதுகாப்பதாக சொன்னது குரானை மட்டும் அல்ல, குரான் ஹதீஸ் இரண்டையும் தான் பாதுகாப்பதாக சொல்கிறான்.

அல்லாஹ் அவன் இறக்கி வைத்ததை பாதுகாப்பதாக சொல்கிறான், அதாவது வஹியை பாதுகாப்பதாக சொல்கிறான். குரான் மட்டும் தான் வாஹிய? ஹதீஸ் வஹி இல்லையா?

"அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை, அது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை" [குரான் 53:3-4] 

ஒரு வஹியை மட்டும் பாதுகாப்பது பாதுகாக்கும் நோக்கதுகே முரண், ஏன் என்றால் மற்ற வஹியில் தான் இதற்கான விளக்கம் இருக்கின்றது அதை பாதுகாக்க விட்டால் இதை பாதுகாக்காத மாறி ஆகிவிடும்.

நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்



No comments:

Post a Comment