Wednesday, February 11, 2015

தப்லீக் ஜமாத்தின் தவறான அடிப்படைகள் (1)

எது மார்க்கம்?


அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் அது மார்க்கம், வேறு எவர் தன்னிஷ்டப்படி சொன்னாலும் அது மார்க்கம் ஆகாது. எனவே குரானும் நபியவர்களுடைய வழிகாட்டல் ஆன ஹதீஸும் மற்றுமே மார்க்கம்.

நபியவர்களுடைய வழிகாட்டல் இது தான் என்று அறிந்துகொள்வதற்கு வேறு சில வழிகள் இருக்கலாம்


உதாரணமாக: சஹாப்பாகளின் இஜ்மா, சஹாபாக்களின் இஜ்மா நபியவர்களின் வழிகாட்டலாகவே கருதப்படும், இப்டி பல வழிகள் இருந்தாலும், அது குரானாகவும் நபியவர்களுடைய வழிகாட்டல் ஆகவும் இருந்தால் மட்டுமே மார்க்கம் ஆகும்.

சஹாப்பாக்கள் குரானையும் நபியவர்களுடைய வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றினார்கள்.

ஆனால் தப்லீக் ஜமாத்தினர் பெரியார்கள் சொன்னது, மகான்கள் சொன்னது, த'லீம் கிதாபில் உள்ளவை என்று மார்கத்தில் இலாத பல அம்சங்களை மார்க்கமாக ஏற்றுகொள்கிறார்கள். அவர்களுடைய மார்க்க உரைகளில் கூட பல இட்டுகட்டப்பட்ட செய்திகள் சொல்லுவார்கள், சில வேளைகளில் உரை நிகல்துபவரும் இட்டுகட்டுவார். அந்த ஊருக்கு ஜமாத்தில் சென்று இருந்த வேலையில் இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று இட்டுகட்டி பயான் செய்வார்கள். நபியவர்கள் நகைச்சுவைக்கு கூட பொய் பேசுவதை தடுத்து இருக்கும் போது மார்க்க விஷயத்தில் பொய் உரைக்கும் அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டார்கள்.

குரான் சுன்னஹ்வின் தீர்ப்பையும் தாண்டி மத்ஹபையும் ஏற்றுகொள்வார்கள்.

குறிப்பாக நம்பிக்கை விஷயத்தில், அல்லாஹ்வை குறித்து, அல்லாஹ்வின் தூதர் (சள்ளள்ளஹு அலைஹி வசல்லம்) குறித்து, மறுமையை குறித்து, சுவர்க்கம் நரகம் குறித்து, சஹாபாக்களை குறித்து, நல்லவர்களை பெரியார்களை குறித்து, அற்புதம் கராமத்தை குறித்து, மலக்குகளை ஜின்களை ஷைத்தான்களை  குறித்து etc ...... நம்பிக்கை கொள்ளும் முறையில் தவறு இழைத்துவிட்டு, அதை மக்களுக்கும் ஊட்டி வருகிறார்கள். இதற்கு காரணம் எது மார்க்கம் என்ற விஷயத்தில் குரான் சுன்னஹ்வை விட்டுவிட்டு பெரியார்கள் மகான்களின் பெயரில் உள்ள கதைகளுக்கும், இட்டுகட்ட பட்ட பலகீனமான செய்திகளுக்கும், சொந்தவால்வில் நடக்கும் சம்பவங்களுக்கும் சென்றதே காரணம். நம்பிக்கை விஷயத்தில் பாரிய அளவில் பின்னடைந்து இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஏதும் நல்லது நடக்க அல்லாஹ் நாடினால் கூட அதை அவர்களுடைய ஜமாத்தில் செல்லுவது போன்ற நல்ல செயல்களின்  காரணமாகவே அப்படி நடந்தது என்று பிழையான நம்பிக்கை எல்லாம் மக்களுக்கு ஊட்டி வருகிறார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

எனவே எது மார்க்கம் என்ற விஷயத்திலும் தப்லீக் ஜமாத்தினர் நபியவர்கள் காலத்தில் நபியவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்த கொள்கையிலோ நிலைபாட்டிலோ இல்லை.

கலிமாவின் சரியான விளக்கம்/நோக்கம் என்ன?


லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை தப்லீக் ஜமாத்தினர் சரியாக புரிந்துகொள்ளவில்லை, அவர்களுடைய உரைகளில் கூட "வஸ்துக்கள் அனைத்திற்கும் எவ்வித சக்தியுமில்லை, அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து சக்திகளும் உண்டு", "அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்து  பரிபாலிப்பவன்" போன்ற சில விளக்கங்களை சொல்வார்கள்.

அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரம் தான் அனைத்து சக்திகளும் உண்டு, அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் கலிமாவின் விளக்கம்/நோக்கம் அதுவல்ல.

நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்காஹ் குறைஷிகள் ஏற்கனவே அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் எண்டு நம்பியிருந்தார்கள், அதற்கு பல குரான் வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றது, உதாரணத்திற்கு பின்வரும் குரான் வசனங்களை சுட்டி காட்டுகின்றேன்.

"நபியே (அவர்களிடம்) சொல்லுங்கள்: உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும்) சொந்தக்காரன் யார்? செத்ததிளிருந்து உயிர்களையும், உயிர்களில் இருந்து செத்ததையும் வெலிபடுட்துபவன் யார்? எனக் கேளுங்கள் அல்லாஹ் தான் என்று அவர்கள் கூறுவார்கள். அப்படியானால் அவர்கள் அவனை பயப்பட வேண்டாமா?" [குரான் 10:37]

குரைஷி காபிர்களே அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் என்று நம்பியிருந்தார்கள், ஆனால் இன்று தாங்கலை முஸ்லிம்கள் என்று அடையாள படுத்தி கொண்டிருக்கும் தரீகா சகோதரர்களில் சிலர் ஒரு சில படைப்புகளை குறிப்பிட்டு அவற்றை சில நபிமார்களும் மகான்களும் படைத்ததாக நம்புகிறார்கள், அதை பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

அப்படி அந்த குறைஷிகள் நம்பியிருந்தும் அல்லாஹ் அவர்களை "குள் யா அய்யுஹல் காபிரூன்" "காபிர்களே!" என்று தான் அழைக்கின்றான். அப்படி என்றால் நபியவர்கள் குறைஷிகளுக்கு மத்தியில் கலிமாவை என்ன விளக்கத்தில்/நோக்கத்தில் பிரச்சாரம் செய்தார்கள்?

படைத்தல், நிருவகித்தல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்று நம்புவது கலிமாவின் ஒரு பகுதியாகும், இதற்கு தவ்ஹீத் அர் ருபூபிய்ய என்று சொல்வார்கள், அதன் இன்னுமொரு பகுதி தான் வணக்க வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற நம்பிக்கையாகும், இதற்கு தவ்ஹீத் அல் உலூஹிய்ய என்று சொல்வார்கள்.

எனவே நபியவர்கள் கலிமாவை போதித்த விளக்கம்/நோக்கம், "வணக்க வழிபாடுகளுக்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனை தவிர வேறு யாரும்/எதுவும் இல்லை" என்பதற்காகவே

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தா'க்ஹூத்களை (அல்லாஹ்வை தவிர வானங்கபடுபவைகளை) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். [குரான் 16:36]

புதிதாக முந்தகப் அஹதீஸ் என்ற புத்தகத்தில் களிமாவுக்கான சரியான விளக்கம் வழங்க பட்டிருந்தாலும் அந்த புத்தகம் பெரும்பான்மையான தப்லீக் சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்றுகொள்ளபடவில்லை, அந்த புத்தகத்தை ஏற்றவர்கள் கூட அதை பெரிதாக பொருற்படுத்துவது போல் இல்லை. அப்படி பொருற்படத்திருப்பார்கள் என்றால் தப்லீக் ஜமாஅத் இரண்டாக பிரிந்திருக்கும். இவர்கள் கொள்கையை புரிந்து அதற்காக செயல்படுவது போல் தெரியவில்லை. வெறுமனே அடிப்படை அறிவில்லாமல் அமல் செய்தால் போதும் என்று இருப்பவர்கள் என்று தான் புரியமுடிகிறது.

ஷேக் முக்பில் இப்னு ஹாதிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவர்களுடைய பிரச்சாரத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறார்


"அபூ ஜஹ்லின் காலத்தில் இவர்களது அழைப்புப் பணி இருந்திருந்தால் அவன் இவர்களை மறுக்கமாட்டான் "
( துஹ்பதுல் முஜீப் : 68)

அல்லாஹ் நம்மனைவரையும் இப்படியான வழிகேடுகளில் இருந்து பாதுகாப்பானாக.

தொடரும் இன்ஷா.அல்லாஹ் .........    

No comments:

Post a Comment