Tuesday, April 7, 2015

கூட்டு துஅ அடிப்படையற்றதே : MT முபாரிஸ் அவர்களுக்கான பதில்

மௌலவி MT முபாரிஸ் ரஷாதி தனது முகநூல் பக்கத்தில் கூட்டு துஅ சம்பந்தமாக தனது நடுநிலமையான பார்வை எண்டு ஒரு கட்டுரையை பதிவு செய்து இருந்தார். அதில் அவர்விட்ட தவறுகளை மக்களுக்கு முன்னிலையில் சுட்டி காட்டவே இந்த பதிவு.

இமாம் சத்தம் இட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரதுல் பாதிஹா ஓதிய பிறகு பின்னால் இருப்பவர்கள் "அமீன்" சொல்லுவார்கள், இதை யாரும் மறுக்கவில்லை,
கூட்டு துஅ பித்'அத் என்று சொல்லும் போது இதை யாரும் குறிபிடவில்லை, வீணாக வாதத்தை திசைதிருப்ப விரும்புபவர்கள் வேண்டுமானால் அப்படி அவதூறு சொல்லி மக்களை திசை திருப்பலாம்.

அப்படி தொழுகையில் கூட்டு துஅ செய்யபடுவதால் மற்ற இடங்களிலும் செய்யலாம் என்று முடிவ செய்ய கூடாது, இது இபாதத் சம்பந்தப்பட்ட விஷயம் அப்படி முடிவு செய்யமுடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும். தெரிந்தும் ஏன்???

மௌலவி முபாரிஸ் அவர்கள்  அவருடைய கட்டுரையில் மொத்தம் இரண்டு செய்திகளை  குறிப்பிட்டு இருந்தார். அவ்விரண்டு செய்தியை ஆதரதன்மையை பற்றி தான் சுருக்கமாக இந்த பதிவில் முன்வைக்கலாம் எண்டு விரும்புகிறோம்.

அவர் முன்வைத்த முதல் செய்தி:

கைஸ் அல்மதனீ என்பவர் கூறுகிறார்: ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து ஒரு விடயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

ஹதீஸ்கலை அறிஞர் இமாம் இப்னு ஹஜர் (ரஹீமஹுல்லாஹ்) அல் இஸாபா எனும் தனது நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதியபட்டதாக தெரிவித்ததை மௌலவி முபாரிஸ் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அப்படி அல் இஸாப எனும் நூலில் சொல்லி இருக்குறார், ஆனால் அவர் அதை தவறுதலாக சரி என்று கூறிவிட்டார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் கைஸ் அல்மதனி என்பவர் இடம்பெருகிறார். அவரை பற்றி இமாம் இப்னு ஹஜர் அவர்களே கூறுகிறார் "கைஸ் அல்மதனி யாரென அறியபடாதவர்" என்று தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மௌலவி முபாரிஸ் முன்வைத்த இரண்டாவது செய்தி:

"ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி அல்லாஹு அன்ஹு), நூல்: ஹாகிம் 5478

இச்செய்தியை குறிப்பிட்ட பிறகு மௌலவி முபாரிஸ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் இப்னு லஹீஆ என்பவரை பற்றி இமாம்கள் சொன்னதையும் இப்னு லஹீஆ என்பவரிடம்  இருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரி அறிவித்தால் அதை ஏற்றுகொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அது உண்மை தான், இச்செய்தியை இப்னு லஹீஆ என்பவரிடம் இருந்து அறிவிப்பவரும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரி என்பதும் உண்மை தான்.

ஆனால், இச்செய்தியை அறிவிக்கும் நபிதோழர் ஹபீப் இப்னு மஸ்லமா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபு ஹுபைரா ஹிஜ்ரி 41 பிறக்கிறார், அறிவிப்பாளரான ஹபீப் இப்னு மஸ்லமா அவர்கள் ஹிஜ்ரி 42 மரணிக்கிறார் எனவே இருவரும் நேரடியாக சந்திக்க வாய்ப்பு இல்லை.

[குறிப்பு : மௌலவி முபாரிஸ் அவர்கள் ஹபீப் இப்னு மஸ்லமா அவர்களிடம் இருந்து அறிவிப்பவர் அபு ஹுபைராவுக்கு பதிலாக இப்னு ஹுபைரா என்று தவறுதலாக பதிவு செய்திருந்தார்]


இருப்பினும் அபு ஹுபைரா நம்பத்தகுந்தவர் என்பதால் அஸ் ஸுனனுள் குப்ரா எனும் நூலில் இடம் பெரும் செய்திக்கு (முதலாம் செய்திக்கு) இது வலுவூட்டும் செய்தியாக எடுக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

முதலாவதாக: அப்படி எடுக்க முடியாது, அது ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணானது, ஏன் என்றால் ஒரே செய்திக்கு ஓரளவு பலம்குரைந்த இரு அறிவிப்பாளர் வரிசை இருந்தால் தான் அப்படி எடுக்கலாம்.

முதலாம் செய்தி வேறு, இரண்டாம் செய்தி வேறு.

முதல் செய்தியில் உள்ள அறிவிப்பாளர் தொடரில் இருப்பவர் யாரென்றே அறியபடாதவர். இரண்டாவது செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இருப்பவர் சந்திக்க வாய்ப்பு இல்லாதவர்.

வெவ்வேறு செய்திகளாக இருப்பதாலும், அதிகம் பலகீனமான அறிவிப்பாளர், அதாவது யாரென்றே அறியபடாத ஒரு அறிவிப்பாளரும் சந்திக்க வாய்ப்பு இல்லாத ஒரு அறிவிப்பாளர் இருப்பதாலும் இவ்விரண்டு செய்தியையும் வைத்து வலுவூட்டும் செய்தியாக எடுக்க முடியாது.

இரண்டாவதாக: ஒரு நபிதொலருக்கும் நபி அவர்களுக்கும் இடையில் தொடர் அருபட்டிருந்தால் தான் அதை ஏற்றுகொள்ளலாம், ஆனால் அபு ஹுபைரா போன்றவர்கள் அப்படி ஒரு அறிவிப்பாளரை விட்டு அறிவித்தால் அந்த அறிவிப்பை எடுக்க முடியாது.

எனவே கூட்டு துஅ என்பது அடிப்படையற்ற ஒரு பித்'அத்  தான் என்பதில் சந்தேகமில்லை.

மௌலவி முபாரிஸ் அவர்கள் தமிழ் நாட்டு மௌலவிமார்கலின் வாதத்தை அவருடைய நடுநிலமையான பார்வையாக பதிவு செய்திருக்கலாம் என்று தான் என்ன தோனுகிறது.

கூட்டு துஅ சம்பந்தமாக வைக்கப்படும் செய்திகள் அனைத்துமே பலகீனமானவை, இவர் வேறு சில செய்திகளை கொண்டுவந்தாலும் அதற்கும் நாம் பதில் தர தயாராக இருக்குறோம் இன்ஷா.அல்லாஹ, ஏன் என்றால் கூட்டு துஅ சம்பந்தமாக முன்வைக்கப்படும் எல்லா வாதங்களை நாம் அறிவோம்.

அல்லாஹு அ'லம்

No comments:

Post a Comment