Saturday, October 5, 2013

தப்லீக் ஜமாத்தின் 6 Number


            தப்லீக் ஜமாத்தின் அடிப்படை அம்சங்களில் அவர்கள் ஆறு விடையங்களை அமைத்திருக்கின்றார்கள். இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுறையோ விளக்கமோ அவர்களது த'லீம் நூல்களிலிருந்து மாத்திரம் தான் பெறப்பட வேண்டும். ஸகரியா ஸாஹிப் என்பவர் தனக்கும் அப்போதைய ஹஸரத் ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவை பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீக்கின் த'லீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். குர்'ஆணை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கபடுகின்ர த'லீம் தொகுப்பு தப்லீக் ஜமாதினருக்கு கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது.


இப்படி குர்'ஆன் ஹதீஸ் உத்தரவின்றி இஸ்லாத்தின் சில அம்சங்களை எடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அடிப்படை ஆக்குவது நிச்சயமாக வழிகேடு. இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த அம்சங்களை பார்ப்போம்.


முதலாம் நம்பர் - கலிமா - லா இலாஹ இல்லல்லாஹ்


லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை தப்லீக் ஜமாத்தினர் சரியாக புரிந்துகொள்ளவில்லை, அவர்களுடைய உரைகளில் கூட "வஸ்துக்கள் அனைத்திற்கும் எவ்வித சக்தியுமில்லை, அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து சக்திகளும் உண்டு", "அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்து  பரிபாலிப்பவன்" போன்ற சில விளக்கங்களை சொல்வார்கள்.

அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரம் தான் அனைத்து சக்திகளும் உண்டு, அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் கலிமாவின் விளக்கம்/நோக்கம் அதுவல்ல.

(மக்கா) குரைஷி காபிர்களிடம் கூட அனைத்தையும் படைத்தவன், ஆக்குபவன், அளிப்பவன், காப்பவன், உணவளிப்பவன், நோயை குனபடுத்துபவன் எல்லாம் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை இருந்தது
எனவே தான் அல்லாஹ் கூறுகின்றான்.

"நபியே (அவர்களிடம்) சொல்லுங்கள்: உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும்) சொந்தக்காரன் யார்? செத்ததிளிருந்து உயிர்களையும், உயிர்களில் இருந்து செத்ததையும் வேளிபடுத்துபவான் யார்? எனக் கேளுங்கள் அல்லாஹ் தான் என்று அவர்கள் கூறுவார்கள். அப்படியானால் அவர்கள் (அவனை) பயப்பட வேண்டாமா? (10:37)

இந்த வசனத்தில் இருந்து அல்லாஹ் தான் எமக்கு அனைத்துக்கும் பொறுப்பாளன், அவனே உணவளிப்பவன் குணமளிப்பவன் etc... எனும் நம்பிக்கை காபிர்களிடம் இருந்ததென்பது தெளிவாகின்றது. எனினும் இத்தகைய மக்களை தான் அல்லாஹ் 'குள் யா அய்யுஹல் காபிரூன்' - காபிர்களே! என்று அழைக்கிறான். அப்படியானால் இந்த கலிமாவின் நோக்கம் தான் என்ன?

படைத்தல்நிருவகித்தல் ஆகிய இரண்டும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும் என நம்புவது தவ்ஹீதுல் ருபூபிய்யா எனப்படுகின்றதுஇது கலிமாவின் ஒரு கிளையாகும்அதன் இன்னொரு கிளை காணப்படுகின்றதுஅதுதான் தௌஹீதுல் உலூஹிய்யா எனப்படும். வணக்கவழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற நம்பிக்கையாகும்

பிரபஞ்சத்தையே  படைத்துப் பரிபாலிக்கும் ஒருவனான அல்லாஹ்வுக்கே வணக்கம் செலுத்தப்படவேண்டும்அவன் மட்டுமே அதற்குத் தகுதியானவன். என்ற கலிமாவின் இந்தப் பகுதியை பிரசாரம் செய்யவே நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்தார்கள்

புதிதாக முந்தகப் அஹதீஸ் என்ற புத்தகத்தில் களிமாவுக்கான சரியான விளக்கம் வழங்க பட்டிருந்தாலும் அந்த புத்தகம் பெரும்பான்மையான தப்லீக் சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்றுகொள்ளபடவில்லை, அந்த புத்தகத்தை ஏற்றவர்கள் கூட அதை பெரிதாக பொருற்படுத்துவது போல் இல்லை. அப்படி பொருற்படத்திருப்பார்கள் என்றால் தப்லீக் ஜமாஅத் இரண்டாக பிரிந்திருக்கும். இவர்கள் கொள்கையை புரிந்து அதற்காக செயல்படுவது போல் தெரியவில்லை. வெறுமனே அடிப்படை அறிவில்லாமல் அமல் செய்தால் போதும் என்று இருப்பவர்கள் என்று தான் புரியமுடிகிறது.


இரண்டாம் நம்பர் - தொழுகை


தப்லீக் ஜமாத்தை பொருத்தவரைக்கும் அவர்களின் த'லீம் தொகுப்பான அமல்களின் சிறப்பில் தொழுகைக்காக ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது த'லீம் தொகுப்பு புத்தகத்தின் அதிக இடங்களில் பலவீனமான ஹதீஸ்களின் விலக்கங்கல்கள் வரும், பின்னர் புனையப்பட்ட முகவரியில்லாத சில விடையங்கள் 'ஒரு ஹதீஸில் வருவதாவது, ஒரு அறிவிப்பில் வருவதாவது' எனும் பெயரில் இடம் பெரும். அதன் பின்னர் பெரியார்களின் வரலாறு எனும் பெயரில் பல்வேறு விதமான போலி கதைகளும் நடக்காத கற்பனை சம்பவங்களும் உயர் செயல்களாக சித்தரிக்கப்பட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டப்படும். இது தான் த'லீம் இரண்டாம் நம்பர் பற்றிய சுருக்கம்.


மூன்றாம் நம்பர் - இல்ம் - திக்ரு


இல்மு - திக்ரு போர்வையில் பல்வேறு காலை மாலை திக்ர்கள், ஹதீஸில் வந்த திக்ரு முறைக்கு மாற்றமாகவும், இவர்களின் பெரியார்கள் சொல்லிக் கொடுத்த பித்'அதான முறையிலும் திக்ர் செய்வார்கள். இல்மு (மார்க்க அறிவு) எனும் பெயரில் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் போதிக்கும் பாடங்களும், இஸ்லாத்தில் இல்லாத பித்'அதான விடயங்களும், ஏன் ஷிர்க்கான விடயங்களும் தாராளமாக போதிக்க படுகின்றன. ஸகரியா ஸாஹிப் எழுதிய மன்ஸில் என்ற கிதாபில் இருந்து பெரியார்களின் கட்டுக்கதைகளில் வந்த து'ஆக்களை காலையிலும் மாலையிலும் ஓதி வருகிறார்கள்.


நான்காம் நம்பர் - இக்ராம் (பிற சகோதரர்களை கண்ணிய படுத்துதல்)


இது வரவேற்க படவேண்டிய ஒரு அம்சம் தான். ஆனால் இதற்கும் த'லீம் கிதாபில் கொடுக்கப்படும் வரையறை கொடுக்கப்படுமாயின் அது நிச்சயமாக பிழை தான். குர்'ஆன் ஹதீஸில் இருந்து தான் அளவிடவேண்டும்.


ஐந்தாம் நம்பர். - இஹ்லாஸ் - மனத்தூய்மை


இஹ்லாசுக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும். தூய்மையான எண்ணம் இருந்தால் போதும் என்று சிறகாக இருந்தாலும், நபி(ஸல்) அவர்களின் வலிக்கு முரணாக இருந்தாலும் எந்த செயல்களாக இருந்தாலும் மக்களின் திருப்ப்திக்காக, பிரச்சினை வேண்டாம் என்று செய்வார்கள், தமது ஜமாஅத் வேலைகளுக்கு இடைஞல் வரக்கூடாது என்பதற்காக, அது கபூர் ஸ்தானங்களில் நடைபெறும் து'ஆ பிரார்த்தனைகளாக இருந்தாலும் என்ன! அவ்லியாக்களுக்காக அறுத்து பலியிடுதளாக இருந்தாலும் என்ன! கத்தம் பாதிஹாவாக இருந்தாலும் என்ன! இந்த அனைத்தும் ஷிர்க் குப்ர் பித்'அதான எல்லா காரியங்களையும் சேர்ந்து கலந்து ஒத்துழைப்பு கொடுப்பார்கள், பின்னர் செய்து விட்டு இஹ்லாஸ் சரியாக இருந்தால் போதும் என்பார்கள். அதாவது எந்த செயலையும் அவர்களது இயக்கத்தின் வழிமுறையில் செய்யலாம் நிய்யத்தை அதற்கு ஒப்ப சரிகட்டி விட்டால் போதுமானது. இது தான் இவர்களுடிய இஹ்லாஸ்(???)


ஆறாம் நம்பர் - தப்லீக் (வெளிக்கிளம்பி செல்லுதல்)

தப்லீக்கில் வெளிக்கிளம்புவதும் வாழ்க்கையை வீணடிப்பதும்.

இந்த விஷயத்தில் இவர்கள் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக: ஒரு கூட்டமாக வெளிக்கிளம்பி எத்தி வைத்தல், எந்த விதமான கேள்விகளும் இல்லாமல் மௌனமாக அமீருக்கு கட்டுபடுதல், தக்லீத் செய்தல், மார்க்கத்துக்கு முரணான எந்த விதமான செயலையோ, குப்ர்கலையோ, ஷிர்க்கையோ அடையாளம் காட்டி வேளிபடுத்தாமல் இருத்தல் .... இது போன்று இன்னும் பல விதிமுறைகள் இவர்களுடைய அறியாமையை வெளிபடுத்தும் வித்தத்தில் இருக்கிறது.

அத்தோடு பின்வரும் பதுவாவையும் பாருங்கள்

"........அல்லாஹ்வுக்காக வெளிக்கிளம்பி செல்வது என்பதை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் மட்டிடாது. இன்னும் ஒரு கூட்டத்தோடு மற்றும் நாற்பது நாட்கள் என்றோ அதற்கு கூடதலாகவோ குறைவாகவோ என்றெல்லாம் மட்டுபடுத்தாமல் தனது சக்த்திக்கு உட்பட்ட வகையில் இருக்கவேண்டும். அத்தோடு அழைப்பாளர் இல்மை சுமந்தவராக இருக்கவேண்டும். இல்ம் இல்லாத அறிவீனராக இருக்க கூடாது. இல்ம் இல்லாத அறிவீனர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
"சொல்லுங்கள் (நபியே) இது எனது வழி. நான் தெளிவான இல்முடன் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்......." (12:108)

அதாவது இல்முடன் என்பது, எதன் பக்கம் மக்களை அழைக்கிறான் என்பதையும், எவைகள் வாஜிபானது, முச்தஹப்பானது, ஹராமானது, மக்ருஹ் ஆனது, போன்றவைகளை அழைப்பாளன் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இன்னும் அவன் எவைகள் ஷிர்க், பித்'அத், குப்ர், பாவம், ஒழுக்ககேடானது என்பவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் தீமை தடுக்கும் படித்தலங்களையும் அறிந்திருக்க வேண்டும். இந்த மாதிரி வெளிக்கிளம்பி செல்வது இல்மை தேடுவதை விட்டும் மக்களின் கவனத்தை திசை திரும்புமாக இருந்தால், பிழையானது. இது வழிகெட்ட சூபிகளின் கட்டுகதைளில் ஒன்று தான். ஏனெனில் அறிவில்லாமல் செயல்படுவது வழிகேடாகும், மற்றும் கற்றுக் கொள்ளாமல் இல்மை பெற்று கொள்வது ஒரு ஏமாற்று வித்தையாகும்"

ஷேக் ஸாலிஹ் அல் பவ்ஸான், - தலாத் மிஹாதராட் பில் இல்ம் வல் த'வா

தப்லீக் ஜமாத்தின் அடிப்படைகளே பிழை என்று புரியமுடிகிறது. இப்படியான வழிகேடுகளில் இருந்து எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக

No comments:

Post a Comment