Friday, October 11, 2013

சூபித்துவதிற்கு ஆதாராம் தேடும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி


சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் இலங்கையிலும் இந்தியாவிலும் இன்னும் உலகில் பல பாகங்களில் இயங்கிவரும் சூபித்துவ தரீகா இயக்கத்தின் முக்கியமான அறிஞர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி. தௌஹீத் பிரச்சாரம் ஆரம்பித்ததும் மக்கள் சத்தியத்தை புரிந்து இவர்களுடைய இயக்கத்தை விட்டும் விலகிவர ஆரம்பித்தார்கள். ஏனெனில் தௌஹீத் வாதிகள்  எதை சொன்னாலும் குர்'ஆணிலும் ஹதீஸ்களிலும்  இருந்து ஆதாரம் காட்டுவார்கள். இதை பார்த்து விட்டு இவர்களும் குர்'ஆஅனையும் ஹதீஸ்களையும் ஆதாரம் காட்டுறோம் எண்டு சொல்லி குர்'ஆணையும் ஹதீஸையும் வளைத்து வேறு விளக்கம் சொல்லி, அல்லது அரை குறையாக மக்கள் முன்னாள் எடுத்து காட்டி சமாளித்து கொண்டிருக்கிறார்கள்.       
அவரிடம் அவ்லியாக்களை அவமதிப்பது பாவமா? என்று ஒரு கேள்வி கேற்கபட்டது.

அவர் அதுற்கு பதில் சொல்லும் போது அவ்லியாக்களுக்கு மரியாதை செலுத்த அவர்களுக்கு சுஜூத் செய்யலாம் என்று சொன்னார்.
அந்த பிழையான கருத்துக்கு ஆதாரமாக ஷைத்தான் ஆதம் (அலைஹிஸலாம்) அவர்களுக்கு சுஜூத் செய்ய மறுத்துவிட்டு அல்லாஹ்விடம் அவன் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சுஜூத் செய்வேன் எண்டு வாதாடியதாகவும் அதற்காக தான் அல்லாஹ் அவனை தண்டித்ததாகவும் இட்டு கட்டி சொல்கிறார்.

 ஷைத்தான் ஆதம் (அலைஹி ஸலாம்) அவரகளுக்கு சுஜூத் செய்ய மறுத்தது உண்மை தான், ஆனால் அவன் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சுஜூத் செய்யவேண்டும் என்று வாதிடவில்லை, அதற்காக அவன் சுஜூத் செய்ய மறுக்கவில்லை. அவன் தன்னை நினைத்து தற்பெருமை கொண்டான். தான் நெருப்பால் படைக்கப்பட்டதால் தான் உயர்ந்தவன் என்றும் ஆதம் (அலைஹிஸலாம்) அவர்கள் கலி மண்ணால் படைக்கப்பட்டதால் அவர் ஷைத்தானை விடவும் கீழுள்ளவர் என்றும் பெருமைபட்டான்.

ஷைதானே அவனுடைய பெருமையை காரணமாக சொல்லி இருக்கும் போது ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஷைத்தானுக்கு வக்காலத்து வாங்குவது போல் அவன் இணைவைக்க மறுத்தான் என்று சொல்கிறார்.

இந்த சம்பவத்தை அல்லாஹ் தெளிவாக குர்'ஆனில் சொல்லி காட்டுகிறான்

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.  [குர்'ஆன் 7:12-13]


இந்த வசனங்களில் ஷைதனே தான் நெருப்பால் படைக்கபட்டிருப்பதை நினைத்து பெருமை கொண்டது தான் சுஜூத் செய்ய மறுத்ததற்கு காரணமாக சொல்கின்றான். ஜமாலி அவர்கள் குர்'ஆன் வசனத்தை தான் நினைத்தவாறு வளைத்து விளக்கம் சொல்லி இருப்பது தெளிவாகின்றது. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கண்ணியமான குர்'ஆனில் விளையாடுகிறார்.

சமாளிக்க ஆதாரம் காட்டும் ஜமாலிக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுப்பானாக  



          

No comments:

Post a Comment